டெல்லி ரயில் நிலையத்தில் கிடந்த 6 வெடிகுண்டுகள்
டெல்லி:
மும்பை ரயிலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ள நிலையில் டெல்லி ரயில் நிலையத்தில் 6வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மும்பையில் முனுந்த் புறநகர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கரமான குண்டுவெடிப்பு சம்பவத்தில் நான்கு பெண்கள் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து டெல்லி உள்பட நாடு முழுவதிலும் உள்ள ரயில் மற்றும் விமான நிலையங்களில்பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு டெல்லி ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டில்அநாதையாகக் கிடந்த ஒரு பிளாஸ்டிக் பையை கீர்த்தி ராம் என்ற பயணிதான் முதலில் பார்த்தார்.அவர் உடனடியாகப் போலீசாரிடம் தகவலைத் தெரிவித்தார். அப்போது அங்கு ஏராளமான மக்கள்கூடியிருந்தனர்.
போலீசாரும் விரைந்து வந்து அந்த பிளாஸ்டிக் பையைச் சோதித்தபோதுதான் அதில் ஆறுவெடிகுண்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். ஆனால் அதில் "டைமர்" எதுவும்இணைக்கப்பட்டிருக்கவில்லை. அதிக வெப்பம் இருந்தாலே போதும், இந்த குண்டுகள் வெடித்துவிடும்.
இவை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் குண்டு வெடிப்பு சம்பவம்தவிர்க்கப்பட்டுள்ளது. ஆறு வெடிகுண்டுகளையும் பத்திரமாக அப்புறப்படுத்திய வெடிகுண்டுநிபுணர்கள் பின்னர் அவற்றை செயலிழக்கவும் செய்தனர்.
இதையடுத்து டெல்லியைச் சுற்றிலும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசார் அங்குலம்அங்குலமாகச் சோதனை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே வெடிகுண்டைக் கண்டுபிடிக்க உதவிய கீர்த்தி ராமுக்கு போலீசார் ரூ.500 பணத்தைபரிசாக வழங்கினர். அவருக்கு மேலும் சில விருதுகள் தரவும் பரிந்துரைக்கப்படும் என்று ரயில்வேபோலீஸ் கமிஷனர் கும்மான் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications