காதை செவிடாக்கும் மைக் செட் பிரார்த்தனை தேவையா?: நீதிமன்றம்
சென்னை:
மத வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகளின்போது பொது மக்களை அச்சுறுத்தும் வகையில்ஒலிபெருக்கிகளை உபயோகப்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சென்னை-மாதவரத்தைச் சேர்ந்த "சர்ச் ஆப் காட் (புல்காஸ்பல்)" என்ற கிறிஸ்தவ அமைப்பு தனதுதேவாலயத்திற்கு அருகே பிரார்த்தனைக் கூடம் கட்ட அனுமதி கோரி மாதவரம் நகராட்சியில் மனுசெய்திருந்தது. ஆனால் அந்த மனுவை நகராட்சி நிர்வாகம் நிராகரித்து விட்டது.
இதை எதிர்த்து "சர்ச் ஆப் காட்" அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி சிவசுப்ரமணியம், மனுவை நிராகரித்தது தவறு என்றுகூறினார். அவர் மேலும் கூறுகையில்,
இருப்பினும், மத வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை, வழிபாடு என்ற பெயரில் இரைச்சல்மட்டுமே அதிகம் உள்ளது.
எந்த மதமாக இருந்தாலும் கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.ஒலிபெருக்கிகளை வைத்து, அதிக சப்தம் போட்டு, காதை செவிடாக்கித்தான் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று அவசியமில்லை.
அதிக சப்தத்தின் மூலம் வயதானவர்கள், உடல் நிலை பாதித்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள்,பரீட்சைக்குப் படிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.
கல்யாண மண்டபங்களும் கூட இப்போது அதிக சப்தத்தை எழுப்பி வருகின்றன. இசையும்,பிரார்த்தனைகளும் மக்களை பயமுறுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது.
விலங்குகள்தான் கத்திக் கொண்டிருக்கும். மனிதர்களாகிய நாம் ஏன் விலங்குகள் அளவுக்கு நம்மைநாமே தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பதை மனுதாரரும், மற்ற மதத்தில் உள்ளவர்களும்யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றார் நீதிபதி சிவசுப்பிரமணியம்.
ஒலி மாசுபடுவது தவிர்க்கப்படும் என்ற உறுதிமொழியை மனுதாரர் நிறைவேற்றிய பிறகேபிரார்த்தனைக் கூடம் கட்ட அனுமதி தருவது குறித்து நகராட்சி நிர்வாகம் முடிவு எடுக்க வேண்டும்என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதன் பின்னர் இவ்வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications