சாத்தான்குளம்: அதிமுக வெற்றிக்கு எதிராய் வழக்கு தொடர காங். குழு அமைப்பு
சென்னை:
சாத்தான்குளம் தேர்தலில் அதிமுக வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடரும் நடவடிக்கைகள் எடுக்கசிவகங்கை எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கட்சியின் மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் குழுஅமைக்கப்பட்டுள்ளது. இதில் எம்.பி. ஞானதேசிகன் உள்ளிட்ட 3 பேர் உறுப்பினர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர்.
எந்தெந்த வகையில் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்வது என்பது குறித்து வரும் 20ம் தேதிக்குள்இந்தக் குழு தனது பரிந்துரையை கட்சித் தலைமையிடம் அளிக்கும். பின்னர் மேலிடத்தின் ஒப்புதல்பெறப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந் நிலையில் சாத்தான்குளம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மகேந்திரன்சென்னையில் சோ.பா மற்றும் இளங்கோவனைச் சந்தித்தார். அப்போது வழக்கு தொடர்பானஅனைத்து ஆதாரங்களையும் திரட்டி விட்டதாகத் தெரிவித்தார்.
சாத்தான்குளத்துக்கு ஜெ. பரிசு:
இதற்கிடையே சாத்தான்குளத்தில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்துக்கான நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்தமுதல்வர் ஜெயலலிதா இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்த உறுதிமொழிகளை நிறைவேற்றும்நடவடிக்கைகளை அறிவித்தார்.
அங்கு பெண்கள் பாலிடெக்டனிக் அமைக்க ரூ. 50 லட்சம் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். சாத்தான்குளத்தைசுற்றியுள்ள 10 கிராமங்களில் வாலிபால் மைதானங்கள் அமைக்க ரூ. 10 லட்சம் ஒதுக்குவதாகவும், இங்குவிளையாட்டு அரங்கம் கட்ட ரூ. 20 லட்சம் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
பிரச்சாரத்தின்போது இந்தத் திட்டங்களுக்கான உறுதிமொழிகளை ஜெயலலிதா வழங்கியதைத் தான் தேர்தல்கமிஷன் கண்டித்திருந்தது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications