வளைகுடா இந்தியர்களை காக்க வேண்டும்: வாஜ்பாய்க்கு வைகோ கடிதம்
சென்னை:
போர் அபாயத்தின் பிடியில் சிக்கியுள்ள ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் தங்கள் ரத்தத்தைவியர்வையாகக் கொட்டி உழைக்கும் இந்தியர்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும்மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு மதிமுக பொதுச் செயலாளரானவைகோ கடிதம் எழுதியுள்ளார்.
பொடா சட்டத்தின் கீழ் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ அங்கிருந்தவாறேவாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில்,
உலகில் உள்ள மொத்த மனித சமுதாயத்தையே அழிக்கும் தன்மை வாய்ந்த ஆயுதங்களைவைத்துள்ள அமெரிக்கா, மற்ற நாடுகள் ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்று கூறுவது வெட்கக்கேடான விசித்திரம்.
ஈராக்கில் கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவர்களில்பெரும்பாலான குழந்தைகள் சத்தான உணவு கிடைக்காமலேயே இறந்துள்ளனர்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுரையைக் கூட மதிக்காமல் ஈராக் மீது போர்தொடுத்தே தீருவது என அமெரிக்கா கூறி வருகிறது. அவ்வாறு போர் தொடுக்கப்பட்டால் அதுஐ.நா. மீது விழுந்த மரண அடியாகும். இந்தப் போர் கொடூரமான அழிவுக்கு வழி வகுக்கும்.
போர் ஏற்படுமானால் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் உயிருக்கும் உடைமைக்கும்ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான முன்ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அவசியம்.
வளைகுடா நாடுகளில் தங்கள் ரத்தத்தை வியர்வையாகக் கொட்டி உழைக்கும் இந்தியர்களைப்பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்.
உலக சமாதானத்துக்குத் தன்னை அர்ப்பணித்துள்ள நாடு நம் இந்தியா. இப்போது நாம் விரக்தியில்கை வீச வேண்டிய அவசியம் இல்லை. உலக அமைதிக்காகத் தொடர்ந்து போராடுவோம் என்றுஅந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications