மதுரையில் 24 கிலோ "உலகக் கோப்பை" கேக்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மதுரையில் உள்ளஒரு பேக்கரி நிறுவனம் 24 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான கேக் ஒன்றைத் தயாரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் "சூப்பர் சிக்ஸ்"ஆட்டங்கள் முடிந்து விட்டன.

இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் கென்யா ஆகிய நாடுகள் அரை இறுதிக்குத் தகுதிபெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவும் இலங்கையும் நாளை மோதவுள்ளன. இந்திய, கென்யஅணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டி வரும் 20ம் தேதி நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய அணியுடனான போட்டி தவிர அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாகவெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய அணியின் வெற்றிகளைப் பல்வேறு விதமாகக் கொண்டாடி வரும் ரசிகர்கள், உலகக்கோப்பையையும் அது வென்று வர வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.

கிரிக்கெட் ஜுரம் இந்திய ரசிகர்களை முழுவதுமாகத் தாக்கியுள்ளதால் இந்தியாவில் எங்குபார்த்தாலும் சிறுவர்களும், சிறுமிகளும், இளைஞர்களும் கிரிக்கெட் மட்டை, பந்து,ஸ்டெம்புகளுடன்தான் திரிகின்றனர். விளையாட்டு மைதானங்களிலும், வறண்டு போன குளம்,ஏரிகளிலும் கிரிக்கெட் ஆட்டங்கள் தூள் பறக்கின்றன.

இந்நிலையில் உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டுமேஎன்று மதுரையில் உள்ள ஒரு பேக்கரி நிறுவனம் நினைத்தது.

அதன்படி 24 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான கேக் ஒன்றைத் தயாரித்து தன் கடையின்வாசலில் வைத்துள்ளது அந்த பேக்கரி நிறுவனம்.

பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள இந்த பேக்கரி நிறுவனத்தின் வாசலில் உள்ள 5 அடி உயரம்கொண்ட இந்தக் கேக்கை கடைக்கு வருபவர்களும் அந்தப் பக்கமாகச் செல்பவர்களும்ஆச்சர்யத்துடன் பார்த்து ரசிக்கின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+