3 த.மா.கா.கா. எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் இணைந்தனர்
சென்னை:
தமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ் தலைவர் குமாரதாஸ் உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் இன்றுஅதிமுகவில் இணைந்தனர்.
காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணையும்போது நாங்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய மாட்டோம் என்றுகூறி குமாரதாஸ் தலைமையிலான 5 தமாகா எம்.எல்.ஏக்கள் தனியாகச் செயல்பட ஆரம்பித்தனர்.
இந்நிலையில் இந்த அணியில் இருந்த சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏவான மணி நாடார் கடந்த நவம்பரில்இறந்தார்.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் தமாகாகா கட்சி தொடங்கப்பட்டது. அதில் மற்ற நான்கு எம்.எல்.ஏக்களும் நீடித்துவந்தனர். அதிமுகவின் பலத்த ஆதரவோடுதான் இந்தக் கட்சி தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இவர்களில் மூன்று பேர் இன்று அதிமுகவில் இணைந்துள்ளனர். குமாரதாஸ், ஈஸ்வரன் மற்றும்ஹக்கீம் ஆகிய மூவரும் இன்று அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தலைமையில்அக்கட்சியில் இணைந்தனர்.
இந்த மூன்று எம்.எல்.ஏக்களும் இணைந்ததைத் தொடர்ந்து சட்டசபையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை140ஆக உயர்ந்துள்ளது.
மற்றொரு எம்.எல்.ஏவான தமிழரசன் தமாகாவின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டுத்தான் கடந்த தேர்தலில்வெற்றி பெற்றார். அவர் இன்னும் அதிமுகவில் இணைவது குறித்து முடிவு எடுக்கவில்லை.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications