ஜோர்டன், சிரியாவில் தஞ்சம் புகும் ஈராக் அகதிகள்
ருவேஷெட் (ஜோர்டன்):
ஈராக் மீது தாக்குதல் தீவிரமாகிவிட்டதால் நூற்றுக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் சிரியா மற்றும் ஜோர்டான் நாடுகளில் தஞ்சம் புக ஆரம்பித்துள்ளனர். கார்கள், லாரிகள், வேன்களில் நாட்டை விட்டு வெளியேறஆரம்பித்துள்ளனர்.
இதையடுத்து ஜோர்டன் தனது ஈராக் எல்லையில் ஆயிரக்கணக்கான கூடாரங்களை அமைக்க ஆரம்பித்துள்ளது. ரெட் கிராஸ் அமைப்புடன்இணைந்து இந்த கூடாரங்களை அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.
ஈராக்கில் பணியாற்றி வந்த சுமார் 450 சூடான் நாட்டினர் முதல் அணியாக இந்த அகதிகள் முகாமுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்குஉணவு, படுக்கைகள் தரப்பட்டுள்ளன. தாக்குதல் மேலும் தீவிரமாகும்பட்சத்தில் பெரும் அளவிலான மக்கள் இந்த முகாம்களில் தஞ்சம்அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல சிரியாவும் அகதிகள் முகாம்களை அமைக்க ஆரம்பித்துவிட்டது.
இதற்கிடையே சதாம் ஹூசேனின் கோபம் தங்கள் மீது திரும்பலாம் என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான குர்து இன மக்கள் ஈராக்கின் பலநகரங்களில் இருந்து தப்பி வட பகுதியில் உள்ள குர்திஸ்தான் பகுதிக்கு ஓட ஆரம்பித்துள்ளனர்.
குர்து இன போராளிகள் சதாமை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடி வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது அமெரிக்காவுடன் சேர்ந்துஈராக்கைத் தாக்கவும் இவர்கள் தயாராகி வருகின்றனர்.
குவைத் மீது தாக்குதல்:
இந் நிலையில் இன்று இரண்டாவது நாளாக குவைத் மீது ஈராக் 3 ஏவுகணைச் செலுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது.
சதாமுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
போரை நிறுத்த வேண்டுமானால் உடனே நாட்டை விட்டு வெளியேறுமாறு ஈராக் அதிபர் சதாம் ஹூசேனுக்கு அமெரிக்கா மீண்டும்எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அமெரிக்கப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்த வேண்டாம் எனவும் ஈராக் ராணுவத்துக்கு அமெரிக்கா கோரிக்கைவிடுத்துள்ளது.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஆரி பிளெய்ஷர் நிருபர்களிடம் பேசுகையில், இது ஈராக்கிய மக்களின் விடுதலைக்காகநடத்தப்படும் போர். அந்த மக்களை அடக்கி ஆட்சி செய்து வந்த சதாம் ஹூசேன் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
இவரைப் போன்ற தலைவர்கள் இல்லாத உலகம் நிம்மதியானதாக இருக்கும். அமெரிக்கப் படைகளைத் தாக்குவதை ஈராக்கிய வீரர்கள்நிறுத்திக் கொள்வது அவர்களுக்கு நல்லது. சரணடையும் வீரர்களுக்கு உரிய மரியாதை தரப்படும் என்றார்.
பெட்ரோலிய சப்ளை:
குவைத்துடன் சவுதி அரேபியாவையும் ஈராக் தாக்க ஆரம்பித்தால் வளைகுடாவில் இருந்து பெட்ரோலிய எண்ணெய் சப்ளை கடுமையாகபாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மாற்று ஏற்பாடுகளை சவுதி அரேபியா செய்ய ஆரம்பித்துள்ளது. சவுதியின் எண்ணெய் கிடங்குகள் மீது ஈராக் தாக்கினால்செங்கடல் பகுதியில் இருந்து எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய அந் நாடு திட்டமிட்டுள்ளது.
அதே போல குவைத் தனது எண்ணெய் கப்பல்களை அமெரிக்கக் கொடியுடன் அந் நாட்டு போர்க் கப்பல்கள் உதவியுடன் பிற நாடுகளுக்குஇயக்கவும் முடிவு செய்துள்ளது.
இந்தியா நடவடிக்கை:
சவுதி, குவைத், ஈரான், யு.ஏ,ஈ., ஏமன், கத்தார், துபாய், ஓமன் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா பெட்ரோலியத்தை இறக்குமதி செய்துவருகிறது. இப்போது பிரச்சனை வெடித்துள்ளதால் மலேசியா, நைஜீரியா, லிபியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து பெட்ரோலியம்வாங்க ஆரம்பித்துள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications