மீண்டும் அமெரிக்க விமானம், ஹெலிகாப்டரை வீழ்த்தியது ஈராக்?
பாக்தாத்:
ஒரு அமெரிக்க விமானத்தையும் ஒரு ஹெலிகாப்டரையும் தனது படைகள் சுட்டு வீழ்த்தியதாக ஈராக் கூறியுள்ளது.மேலும் பல அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.
இன்று நிருபர்களிடம் பேசிய தகவல் துறை அமைச்சர் அல் சகாப் இதனைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
பாக்தாதை நோக்கி வரும் அமெரிக்கப் படைகளை வழியில் எங்கள் படைகள் பல இடங்களில் தாக்கி வருகின்றன.இதில் பல அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தங்களுக்கு கடும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதால்வெறியடைந்துள்ள அமெரிக்கப் படைகள் வழியில் அப்பாவி மக்களையும் கொன்று வருகின்றன.
பாக்தாதுக்கு வரும் அவர்களுக்கு மலர்கள் காத்துக் கொண்டிருக்கவில்லை. துப்பாக்கிகள் காத்துக் கொண்டுள்ளன.உயிரை இழக்க வரும் அமெரிக்க- பிரிட்டிஷ் வீரர்களை பாக்தாதுக்கு வரவேற்கிறேன் என்றார்.
இன்று விமானம், ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதாக ஈராக் கூறியதை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை.
அரபு நாடுகளுக்கு ஈராக் கோரிக்கை:
இதற்கிடையே பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து உலக அளவில் குறிப்பாக அமெரிக்கா,பிரிட்டனில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துமாறு அரபு நாடுகளுக்கு ஈராக் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈராக் துணை அதிபர் தாகா யாசின் ரமதான் கூறுகையில், ஈராக்குக்கு அரபு நாடுகள் துணையாக நிற்க வேண்டும்.அமெரிக்காவுக்குப் பணிந்து எங்கள் தூதர்களை வெளியேற்றி வரும் அரபு நாடுகள் வெட்கப்பட வேண்டும்என்றார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications