பிரிட்டிஷ் டாங்கை தாக்கிய பிரிட்டிஷ் டாங்க்: 2 வீரர்கள் பலி
பாஸ்ரா:
பாஸ்ராவில் பிரிட்டிஷ் டாங்க்கின் மீது இன்னொரு பிரிட்டிஷ் டாங்க் தாக்குதல் நடத்தியது. இதில் இரு பிரிட்டிஷ் வீரர்கள்கொல்லப்பட்டனர்.
பாஸ்ராவில் வெளியே இருந்தவண்ணம் ஈராக்கிய வீரர்கள் மீது பிரிட்டனின் 1வது ராயல் ரெஜிமென்ட் படைகள் குண்டுகளை வீசிவருகின்றன. இந் நிலையில் நேற்றிரவு பிரிட்டனின் சேலஞ்சர்-2 ரக டாங்க் மீது இன்னொரு பிரிட்டிஷ் டாங்க் தாக்குதல் நடத்தியது. இதில்அந்த டாங்க் வெடித்துச் சிதறியது.
அதில் இருந்த கேப்டன் ஸ்டீபன் ஜான், டேவிட் ஜெப்ரி ஆகிய 2 பிரிட்டிஷ் வீரர்கள் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் இருவர்பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தகவலை லண்டனில் இங்கிலாந்து பாதுகாப்புஅமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கலோனல் கிரிஸ் வெர்னான் உறுதி செய்தார்.
பேட்ரியாட்டை சுட்ட எப்-16:
இதற்கிடையே பாஸ்ரா அருகே நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை லாஞ்சர்களின் மீது அமெரிக்காவின் எப-16போர் விமானம் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியது. முன்னதாக அந்த பேட்ரியாட் ஏவுகணையின் ரேடார் தவறுதலார எப்-16விமானத்தை குறி வைத்தது.
இதையடுத்து எப்-16 இத் தாக்குதலை நடத்தி பேட்ரியாட் ஏவுகணை லாஞ்சரை சிதறடித்தது. இதில் அமெரிக்கப் படையினர் பலர்காயமடைந்தனர்.
ஜி.பி.எஸ். ஜாமர்கள் அழிப்பு:
இந் நிலையில் ஈராக் வசம் உள்ள ரஷ்யாவின் ஜி.பி.எஸ். ஜாமர்கள் எனப்படும் செயற்கைக் கோள்களைக் குழப்பும் கருவிகள் மீது அமெரிக்கவிமானங்கள் தாக்குதல் நடத்தின.
நேற்று மட்டும் 6 ஜாமர்களை அமெரிக்க விமானங்கள் கண்டறிந்து குண்டுவீசி அழித்தன. ஆனால், ஈராக்கிடம் இவை பெரும்எண்ணிக்கையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏவுகணைகள், குண்டுகளை திசை திருப்ப இந்த ஜாமர்கள் உதவும்.
இரு ஹெலிகாப்டர்களை காணவில்லை:
இந் நிலையில் தெற்கு ஈராக்குக்குள் நுழைந்த ஒரு அபாச்சி ஹெலிகாப்டரையும் இன்னொரு பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டரையும்காணவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.
நேற்று மேலும் இரு இரு ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈராக்கிய செய்தித்துறை அமைச்சர் அல் சகாப் கூறியிருப்பதுகுறிப்பிடத்தக்கது. இது தவிர விமானியில்லாமல் இயங்கும் அமெரிக்காவின் பிரிடேட்டர் ரக விமானத்தையும் ஈராக் சுட்டு வீழ்த்தியுள்ளது.
தரையில் விழுந்து நொறுங்கிக் கிடக்கும் அந்த விமானத்தை ஈராக்கியத் தொலைக்காட்சி காட்டியது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications