பாக்தாத் மார்க்கெட் மீது அமெரிக்கா தாக்குதல்: 18 அப்பாவிகள் பலி
பாக்தாத்:
பாக்தாத் நகரின் மத்திய மார்க்கெட் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 18 அப்பாவி மக்கள்உயிரிழந்தனர்.
அதிபர் சதாம் ஹூசேனை எதிர்த்துத் தான் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறும் அமெரிக்கப் படைகள் அப்பாவிமக்களையும் கொன்று குவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஏவுகணைத் தாக்குதலில் மார்க்கெட் கட்டடம் சிதறி சின்னாபின்னாவானது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த பலகார்களும் வெடித்துச் சிதறின. கட்டதத்தின் மத்தியில் இந்த ஏவுகணை புகுந்து பலத்த ஓசையுடன் வெடித்துத்சிதறியது.
இத் தாக்குதல் தவறாக நடந்துவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்து விசாரணைக்கும்உத்தரவிடப்பட்டுள்ளதாக பென்டகன் கூறியுள்ளது.
புரட்சி: பிரிட்டன் பல்டி
இந் நிலையில் பாஸ்ராவிலும் மேலும் பல நகர்களிலும் சதாம் ஹூசேனுக்கு எதிராக மக்கள் புரட்சி செய்துவருவதாகக் கூறிய பிரிட்டன் அந்தத் தகவலை திரும்பப் பெற்றுள்ளது. பாஸ்ராவில் ஈராக்கியப் படைகளுக்குஎதிராக மக்களே தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறிய பிரிட்டிஷ் படைகள், இப்போது கதையை மாற்றியுள்ளன.
புரட்சியை சதாமின் படைகள் ஆரம்பத்திலேயே ஒடுக்கிவிட்டதாக பிரிட்டன் இப்போது கூறியுள்ளது.
இந் நிலையில் ஈராக்கில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் பலியான மக்களின் இறுதிச் சடங்குகளில்ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அவர்கள் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக கோஷங்கள்எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்றனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications