கிரிக்கெட் வீரர்களுக்கு வருமான வரி விலக்கா?- தி.க. போராட்டம்
மதுரை:
கிரிக்கெட் வீரர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதைக் கண்டித்து திராவிடர்கழகம் சார்பில் மதுரையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியஅணி இறுதி ஆட்டம் வரை சென்றது.
முதல் சுற்றுப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுடன் மற்றும் இந்தியா தோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து அனைத்து ஆட்டங்களிலும் இந்திய கிரிக்கெட் அணியினர் சிறப்பா விளையாடி இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றனர்.
குறிப்பாக முதல் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணியினர் அபாராமாகத்தோற்கடித்தனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட்ரசிகர்களுக்கும் பெரும் "பிரஸ்டீஜ்" விஷயமாக இருந்த இந்தப் போட்டியில் பாகிஸ்தான்தோற்கடிக்கப்பட்டதும், நாடே அதைக் கொண்டாடி மகிழ்ந்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வருமான மற்றும் சுங்கவரிகளிலிருந்து விலக்கு அளித்தது மத்திய அரசு.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த வரிச் சலுகைகளைக் கண்டித்துமதுரையில் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. சுமார் 50 திராவிடர் கழகத்தொண்டர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
"கிரிக்கெட் வீரர்கள் ஏற்கனவே கோடிக் கோடியாக சம்பாதித்துக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்நிலையில் அவர்களுக்கு வருமான வரிச் சலுகை அளிப்பதெல்லாம் அவசியம்தானா? இதனால்அரசுக்குத்தான் நஷ்டமே தவிர மக்களுக்கு ஒரு பயனும் இல்லை" என்று போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications