கருணாநிதி- வைகோ திருப்தி, ஜெயலலிதா திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடுஎன்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளரர் வைகோவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவைவாபஸ் பெற மத்திய அரசு முன் வந்தது குறித்து கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:

பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்படாகும். இதில்எள்ளளவும் சந்தேகமே இல்லை.

வைகோ வழக்குத் தொடர்பாக தவறாக மனு செய்துவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. அது எரர்(error) தான், எங்களை மிரட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட டெரர் (terror) அல்ல.

எந்த மாநிலத்திலும் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது. அதை மத்திய அரசு தடுக்கவேண்டும். அதைச் செய்ய முடியாவிட்டால் சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

வைகோவை விடுதலை செய்யக் கோரி நேற்று முன்தினம் உண்ணாவிரதப் போராட்டத்தைவெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். அடுத்தகட்ட போராட்டம் குறித்து அனைத்துக்கட்சிகளுடனும் கலந்து பேசி விரைவில் முடிவெடுக்கப்படும்.

நேற்று பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு மதிமுக, பா.ம.கவை அழைக்காதது தவறு அல்ல.அது தே.ஜ.க. கூட்டணி கூட்டம் அல்ல என்றார் கருணாநிதி.

வைகோ வலியுறுத்தல்:

இதற்கிடையே பொடா சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவால் ஏற்பட்ட குழப்பங்களைத்தொடர்ந்து இன்று வேலூர் சிறை சென்று வைகோவை சந்தித்தனர் மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசனும் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனும்.

அவர்கள் மூலமாக வைகோ வெளியிட்ட்ட அறிக்கையில்,

என்னுடைய விடுதலைக்காக உண்ணாவிரத போராட்டம் நடத்திய திமுக, பாமக உள்ளிட்டகட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படமாட்டாது என்று துணைப் பிரதமர் அத்வானி உறுதி அளித்தும் அதை தமிழக முதல்வர் ஜெயலலிதாமீறி நடந்து கொண்டுள்ளார்.

எனவே பொடா சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் எனக்குஎதிராக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த கருணாநிதிக்கு நன்றி.எல்.கணேசனும் செஞ்சி ராமச்சந்திரனும் கருணாநிதியைச் சந்திப்பர்.

என் மீதான வழக்கில் திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்வோம் என மத்திய அரசு கூறியுள்ளதுதிருப்தி தருகிறது என வைகோ கூறியுள்ளார்.

விடுவிக்க முடியாது: ஜெ. திட்டவட்டம்

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரான வைகோவைவிடுதலை செய்ய இயலாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

தமிழக சட்டசபையில் வைகோ கைது குறித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உறுப்பினரானசந்தானம் கேள்வி எழுப்பினார் (இவர் அதிமுக ஆதரவாளர்). இதற்கு ஜெயலலிதா பதில்அளிக்கையில்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொடா சட்டத்தின் கீழ்தான் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.விடுதலைப்புலிகள், தமிழர் விடுதலைப் படை, தமிழர் மீட்சிப் படை என்பன உள்ளிட்ட மொத்தம்32 அமைப்புகளை மத்திய அரசு பொடா சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது.

இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பை ஆதரித்து வைகோ பேசியதால்தான்வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட 42 பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களைவிடுதலை செய்ய முடியாது.

மேலும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் வைகோ தொடர்ந்த வழக்கு நடந்து வருகிறது. அதில் தமிழகஅரசு தலையிட முடியாது. பழ. நெடுமாறன் ஜாமீன் கோரி பொடா நீதிமன்றத்தை அணுகலாம் என சென்னைஉயர் நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்யும்என்றார் ஜெயலலிதா.

சட்டம் வாபஸ் இல்லை: பா.ஜ.க.

வைகோ விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தவறு ஏற்பட்டு விட்டதைபா.ஜ.க. ஒப்புக் கொண்டுள்ளது.

சென்னையில் இது தொடர்பாக இன்று நிருபர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் வெங்கையாநாயுடு, அட்டர்னி ஜெனரலின் ஜூனியர் வழக்கறிஞர்கள் செய்த தவறு காரணமாக மத்திய அரசுதாக்கல் செய்த பதில் மனுவில் வைகோ குறித்து தவறாகக் கூறப்பட்டுள்ளது. அது திருத்தப்படும்.

பொடா சட்டத்தைத் திரும்பப் பெற மாட்டோம். உண்மையைச் சொன்னால் இதைவிடக் கடுமையானசட்டம் தேவை. தே.ஜ.க. கூட்டணிக் கூட்டத்துக்கு பா.ம.க., மதிமுகவை அழைக்காததில் எந்தஉள்நோக்கமும் இல்லை.

கூட்டணியை விட்டு வெளியேறும் நோக்கத்தில் பொடாவுக்கு கருணாநிதி எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை. வெளியேற நினைத்தால் அதை வெளிப்படையாகவே சொல்லிவிடும் தைரியம்படைத்த சில அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர் என்றார் வெங்கையா நாயுடு.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+