கூவாகத்தில் கொண்டாட்டம்: அலிகள் திருவிழா தொடக்கம்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் அலிகள் ஆண்டுதோறும் கொண்டாடும் "அரவாணிகள்திருவிழா" கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் மொத்தம் 18நாட்களுக்கு இந்தத் திருவிழா நடைபெற உள்ளது.
வரும் 13ம் தேதி அரவான் பலியிடும் விழாவும், 15ம் தேதி அலிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும்நடக்கவுள்ளன.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் அலிகள் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வார்கள். தாலி கட்டும் நிகழ்ச்சியன்று அனைத்து அலிகளுக்கும் கூத்தாண்டவர் கோவில்பூசாரி தாலி கட்டுவார்.
அன்று இரவு முழுவதும் ஆட்டம், பாட்டம் என அலிகளுக்குக் கொண்டாட்டம்தான். பின்னர்அரவான் களப்பலி நிகழ்ச்சி நடக்கும். அப்போது அலிகள் தங்கள் தாலிகளைக் கழற்றி எறிந்து,பொட்டை அழித்து, விதவைகளாகக் காட்சி அளிப்பார்கள்.
அலிகள் திருவிழாவின் ஒரு பகுதியாக "அழகி" போட்டிகளும் நடத்தப்படும். இதில் சிறந்த"அழகி"யாகத் தேர்ந்தெடுக்கப்படும் அலிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
கூத்தாண்டவர் கோவில் வரலாறு:
மகாபாரத காலத்தில் பாரதப் போரின்போது பாண்டவர்களின் வெற்றிக்காக சர்வ வல்லமை படைத்தஒருவரைப் பலியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் யாரும் முன் வரவில்லை.
இந்நிலையில் அர்ஜூனனின் மகன் அரவான் தனது உயிரைப் பலி கொடுக்க முன் வந்தான். ஆனால்பலியாவதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள அவன் விரும்பினான்.
இறக்கப் போகும் ஒருவனுக்குப் பெண் கொடுக்க யாரும் முன் வரவில்லை. இதனால் பலியிடுவதுதடைபட்டது. இதையறிந்த பகவான் கிருஷ்ணன் தானே பெண் உருவம் எடுத்தார். அரவானை மணம்புரிந்தார். அதற்கு அடுத்த நாள் அரவான் பலியிடப்பட்டான்.
பெண் வேடத்தில் வந்த கிருஷ்ணர்தான் அரவாணி (அலி) கோலத்தில் கூத்தாண்டவராக கூவாகத்தில்கோவில் கொண்டுள்ளார். தங்களை கிருஷ்ணரின் வாரிசாகக் கூறிக் கொள்ளும் அலிகள் இங்குவந்து ஆண்டுதோறும் விழா கொண்டாடி வருகிறார்கள்.
இந்தியாவிலேயே அலிகளுக்கென சிறப்புக் கோவில் இருப்பது கூவாகத்தில் மட்டும்தான்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications