ராணிமேரிக் கல்லூரி மாணவிகள் தீவிர போராட்டம்: போலீசார் தாக்குதல்- கல்லூரியை மூட அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராணி மேரிக் கல்லூரியை இடித்துவிட்டு அங்கு தலைமைச் செயலகம் கட்ட முதல்வர் ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளதை எதிர்த்து அக் கல்லூரி மாணவிகளும் ஆசிரியர்களும் இன்று இரண்டாவது நாளாகபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றும் அவர்கள் மெரீன கடற்கரைச் சாலையில் நடு ரோட்டில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினர். இதனால்மெரீனா கடற்கரைச் சாலையில் இரண்டாவது நாளாக இன்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவிகளின் போராட்டத்தை அடக்க கல்லூரியை காலவரையின்றி மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் தேர்வுகளை ரத்து செய்யவும் உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா. மேலும் கல்லூரி விடுதியில் உள்ளமாணவிகளை வெளியேற்றிவிட்டு அதையும் மூட உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து கல்லூரி விடுதிகளில் இருந்து மாணவிகளை வெளியேற்றும் அராஜக செயலில் காக்கிச் சட்டைகள்ஈடுபட்டுள்ளன. ஆனால், கல்லூரியைவிட்டோ விடுதியைவிட்டோ வெளியேற மறுத்துவிட்ட மாணவிகள் உள்இருப்புப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

கண்ணீர்விட்ட ஆசிரியைகள்:

நேற்று மாணவிகளும் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரீனா கடற்கரைச் சாலையில் அவர்கள்சுட்டெரிக்கும் வெயிலில் அமர்ந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்துவாகனங்கள் வேறு வழியாகத் திருப்பிவிடப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் மாணவிகளைக் கலைந்துபோகச் சொல்லி வற்புறுத்தினர். ஆனால், அவர்கள் கலையவில்லை. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையேதள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆசிரியர்களிடம் சென்ற போலீசார் மாணவிகளைக் கலைந்து போகச் செய்யுமாறு கேட்டனர். ஆனால், சிலஆசிரியைகள் கல்லூரி உடைக்கப்படுவதைச் சொல்லி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினர். இதையடுத்துபோலீசார் அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டனர்.

சுவர் ஏறிக் குதித்த மாணவிகள்:

இந் நிலையில் இன்றும் காலையில் கல்லூரி தொடங்கியவுடன் ஆயிரக்கணக்கான மாணவிகளும் ஆசிரியைகளும்சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த வந்தனர். ஆனால், கல்லூரி தொடங்குவதற்கு முன்பே அங்குகுவித்துவிட்ட நூற்றுக்கணக்கான போலீசார் மாணவிகளை வெளியே வர விடாமல் தடுத்தனர்.

அவர்களை கல்லூரிக்குள் வைத்துப் பூட்டினர். பிரதான வாயிலைப் பூட்டிவிட்டு பாதுகாப்பாக நின்று கொண்டனர்.இதையடுத்து மாணவிகள் சுவர் ஏறிக் குதித்து கடற்கரைச் சாலைக்கு வந்தனர். அவர்களை பெரிய கயிற்றால் சுற்றிவளைத்த போலீசார் அப்படியே தள்ளி கல்லூரிக்குள் இழுத்து வர முயன்றனர்.

இதனால் போலீசாருக்கும் மாணவிகளுக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. போலீசாரின் அடாவடியையும் மீறிமாணவிகள் தொடர்ந்து சாலையில் அமர்ந்து அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

கல்விக் கண்ணை மூடாதே...

அணைக்காதே அணைக்காதே.. கல்வி விளக்கை அணைக்காதே, மூடாதே மூடாதே... கல்விக் கண்ணை மூடாதே,செய்யாதே செய்யாதே.. கல்வியில் அரசியல் செய்யாதே என்று மாணவிகள் எழுப்பிய கோஷம் அந்தப் பகுதியைகிடுகிடுக்க வைத்தது.

இந்த மாணவிகளுக்கு ஆதரவாக மாநிலக் கல்லூரி, லயோலா கல்லூரிகளின் மாணவ, மாணவிகளும்போராட்டத்தில் வந்து கலந்து கொண்டனர்.

இதையடுத்து மாணவ, மாணவிகளை விரட்டி அடிக்குமாறு காக்கிச் சட்டைகளுக்கு ஜெயலலிதாவிடம் இருந்துஉத்தரவு பறந்தது. இதையடுத்து மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பல மாணவிகள்காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து ஆசிரியைகள் தலையிட்டு மாணவிகளை மீண்டும் கல்லூரிக்குள் கொண்டுசென்றனர்.

உள் இருப்புப் போராட்டம்:

கல்லூரிக்குள் சென்ற மாணவிகள் இனி நாங்கள் கல்லூரியைவிட்டு வெளியேற மாட்டோம். இங்கேயே அமர்ந்துஉள் இருப்புப் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளனர். இதையடுத்து கல்லூரியை காலவரையின்றி மூடஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அனைத்துத் தேர்வுகளையும் ரத்து செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார். கல்லூரியின் விடுதியை மூடிமாணவிகளை வெளியேற்றவும் உத்தரவிட்டுள்ளார். ஆனால், விடுதியைவிட்டு வெளியேற மாட்டோம் எனமாணவிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

இப்போது மாணவிகளை குண்டுகட்டாகத் தூக்கி வெளியேற்றிவிட்டு கல்லூரியையும் விடுதியையும் முடும்முயற்சிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக ரவுடிகள் தலையீடு?:

முன்னதாக சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகள் சிலர் மீது ஒரு கார் மோதிவிட்டுத் தப்பியது.இந்தக் காரை கூட்டத்துக்குள் போலீசார் ஏன் அனுமதித்தனர் என்று தெரியவில்லை. அந்தக் காரில் அதிமுகவைச்சேர்ந்த ரவுடிகள் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

போலீசாருக்கு மாணவிகள் கட்டுப்படாவிட்டால் ரவுடிக் கூட்டத்தைவிட்டு தாக்குதல் நடந்தாலும்ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழஙகியதால் தர்மபுரியில்கோவை விவசாயக் கல்லூரி மாணவிகளை பஸ்சில் வைத்து மொத்தமாய் எரித்தே ஒரு கும்பல். அதுபோலமீண்டும் ஏதும் நடந்துவிடாமல் தடுக்க வேண்டிய கடமை போலீசாருக்கு உண்டு.

கேவலமோ கேவலம்:

புதிய கல்லூரி கட்டப்படும் வரை இந்த ராணி மேரிக் கல்லூரி மாணவிகளுக்கு மாற்று இடம் தரக் கூட ஜெயலலிதாமுன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்லூரி மாணவிகளுக்கு வெலிங்டன் கல்லூரியிலும் பிறகல்லூரிகளிலும் சீட் தருவதாகவும் அங்கு சென்று படிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

ஒரு கல்லூரியில் தொடர்ந்து படித்தாலே பலவித சிக்கல்கள் வரும் நிலையில், பாதிப் படிப்பை ஒரு கல்லூரியிலும்மிச்சத்தை அடுத்த கல்லூரியில் படித்தால் சான்றிதழ் பெறுவதில் இருந்து அனைத்து வகையிலும் பிரச்சனைகள்வரும் என்பதை நினைத்து மாணவிகள் பயந்து போய் உள்ளனர்.

சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிகா கல்லூரி இடிப்பு குறித்து வீர உரையாற்றியபோது அதிமுக அமைச்சர்களும்எம்.எல்.ஏக்களும் மேஜைகளைத் தட்டி வரவேற்றது தான் கேவலத்திலும் கேவலமாக இருந்தது. ஒருவர் முகத்தில்கூட ஆயிரக்கணக்கான மாணவிகளின் கல்வி பறிபோகிறே என்ற கவலையைக் காண முடியவில்லை.

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+