• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு வரலாறு அழிகிறது: உபயம்- ஜெயலலிதா

By Staff
|

சென்னை:

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக சென்னை கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ராணி மேரிக்கல்லூரியை (குயீன்ஸ் மேரி) உடைத்தே தீருவோம் என முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இப்போதிருக்கும் தலைமைச் செயலகம் ஏதோ காரணத்தினால் ஜெயலலிதாவுக்குப் பிடிக்காமல் போய்விட்டது.இதனால் மகாபலிபுரம் சாலையில் பல ஆயிரம் கோடியில் நிர்வாக நகரத்தையும், சட்டசபையையும் கட்ட முடிவுசெய்தார்.

ஊதியம் கொடுக்கவே காசில்லை என்று கூறும் அரசு, நீதிமன்றத்துக்கே ஊழியர்கள் தர காசு இல்லை என்று கூறும்அரசு இதற்கு மட்டும் எங்கிருந்து பல்லாயிரம் கோடிகளைக் கொண்டு வரப் போகிறது என்ற கேள்விகள்எழுந்ததால் இப்போது இருக்கும் சட்டமன்றத்துக்கு அருகிலேயே புதிய சட்டமன்றம் கட்ட முடிவு செய்தார்ஜெயலலிதா.

இதற்காக பல மீனவர் குப்பங்களையும் கையகப்படுத்த முயன்றார். ஆனால், போராட்டம் வெடிக்கும, ரத்த ஆறுஓடும் என மீனவர்கள் மிரட்டியதாலும் மீனவர்களின் ஓட்டுக்களை மனதில் வைத்தும் அத் திட்டத்தை ரத்துசெய்தார்.

அடுத்தபடியாக கடற்கரைச் சாலையில் ஒரு நூற்றாண்டையும் கடந்த கம்பீரமாக நிற்கும் சென்னையின்பெருமைக்குறிய அடையாளங்களில் ஒன்றான ராணி மேரிக் கல்லூரி ஜெயலலிதாவின் கண்ணில் பட்டுவிட்டது.

குயீன்ஸ் மேரி என்பது கல்லூரி மட்டுமல்ல. அது இந்தியாவின் மிகப் பழமையான, பாரம்பரியங்களில் ஒன்று.இந்தக் கல்லூரியை உடைத்துவிட்டுத் தான் புதிய சட்டசபையைக் கட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நிற்கஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதா உறுதி:

இந் நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா ராணி மேரிக் கல்லூரி அமைந்துள்ள இடத்தில் தான் புது தலைமைச்செயலகம் கட்டப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

அவர் கூறியதாவது: தற்போதுள்ள தலைமைச் செயலகக் கட்டடத்தில் இடநெருக்கடி நிலவுகிறது. எனவே அதை ராணிமேரிக்கல்லூரி உள்ள இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக அமையும் தலைமைச் செயலகக் கட்டடத்தில் சட்டசபை அரங்கம், கூட்ட அரங்கம், ஹெலிகாப்டர் இறங்க வசதியாக ஒருஹெலிபேட், விருந்தினர் இல்லம் ஆகியவை இருக்கும்.

தற்போதைய தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள 1975ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட நாமக்கல் கவிஞர்மாளிகைக் கட்டடம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளன. கட்டடம் சீர்கெட்டுவிட்டது. இதனால் அங்கு யாருமே இருக்கமுடியாத நிலை ஏற்பட்டுளது. இதனால் தான் தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்தோம்.

ராணி மேரிக் கல்லூரியை அருகில் உள்ள வெலிங்டன் சீமாட்டிக் கல்லூரி வளாகத்திற்கு இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.அங்கு நவீன முறையில் ராணி மேரிக் கல்லூரி கட்டப்படும். அரசின் இத் திட்டத்தை அனைத்து தரப்பினரும்வரவேற்பார்கள் என்றே நம்புகிறேன் என்றார் ஜெயலலிதா.

பாரம்பரியம் மிக்க கல்லூரியை இடிப்பதை யாராவது வரவேற்றால் அவர்கள் நிச்சயம் பாரம்பரியம்தெரிந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்பது பாமரர்களுக்கும் தெரியும். இது ஜெயலலிதாவுக்குத் தெரியாமல்போனது ஏன் என்று தெரியவில்லை.

மாணவர்கள் கொதிப்பு:

இதற்கிடையே, ராணி மேரி கல்லூரியை இடிக்கும் முயற்சிக்கு கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் இடையே கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தவிர பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கல்லூரியைக் காக்க சென்னை நகரில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர் ஒன்று சேர்ந்து போராட்டத்தில்இறங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

""இன்று "ராணி மேரி"க்கு நேரும் கதி நாளை மாநிலக் கல்லூரிக்கும் (இதுவும் மெரீனா கடற்கரையோரம்தான்உள்ளது), லயோலா கல்லூரிக்கும் நேராது என்பதற்கு என்ன உத்தரவாதம்? எனவே ராணி மேரி கல்லூரியைக்காக்க நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக உள்ளோம்"" என்று மாணவர்கள் கூறுகிறார்கள்.

தங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் நேரில்சந்திக்கப் போவதாகவும் மாணவர்கள் கூறுகிறார்கள்.

இதற்கிடையே ராணி மேரி கல்லூரியில் இந்த ஆண்டு மாணவிகள் சேர்க்கையை நிறுத்தி வைக்குமாறு கல்லூரிநிர்வாகத்திற்கு மாநில உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

படிப்பைப் கெடுப்பதில் அரசுக்கு உள்ள ஆர்வம் ஆச்சரியம் தருகிறது.

ஜெ. காரை வழிமறிக்க முயற்சி:

தங்களது கல்லூரியை இடிக்க அரசு முடிவு எடுத்துள்ளதைக் கண்டித்து அக்கல்லூரி மாணவிகள் நேற்று திடீர்போராட்டம் நடத்தினார்கள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள தன் வீட்டிலிருந்து தலைமைச் செயலகத்திற்குக் காரில்வந்து கொண்டிருந்தார். ராணி மேரி கல்லூரி அமைந்துள்ள கடற்கரைச் சாலை வழியாகத்தான் அவருடைய கார்வந்தது.

அப்போது கல்லூரி வாசலின் முன் மாணவிகள் கூட்டமாகக் கூடி நின்றனர். அங்கு வந்த போலீசார் மாணவிகளைகல்லூரிக்குள் செல்லுமாறு கூறினர். ஆனால் மாணவிகள் அதைக் கண்டுகொள்ளாமல் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தனர்.

இதற்குள் ஜெயலலிதாவின் கார் அருகில் வந்து விடவே போலீசார் பதறிப் போனார்கள். "இடிக்காதே இடிக்காதே,கல்லூரியை இடிக்காதே" என்று கோஷம் போட்டவாறே ஜெயலலிதாவின் காரை மறிக்க முயற்சித்தனர்மாணவிகள்.

ஆனால் கார் அவர்களைக் கடந்து வேகமாகச் சென்று விட்டது. உள்ளே அமர்ந்திருந்த ஜெயலலிதா நிமிர்ந்து கூடப்பார்க்கவில்லை.

இதற்குள் கல்லூரி வாசலின் முன் ஏராளமான ஆண், பெண் போலீசார் வேன்களில் வந்து குவிந்துவிட்டனர்.கல்லூரியின் கதவை போலீசார் இழுத்து மூடி மாணவிகளை விரட்டினர். இதையடுத்து போலீசாருக்கும்மாணவிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கல்லூரியை இடித்துவிட்டு அங்கே ஹெலிபேட், விருந்தினர் இல்லம், சட்டசபை அமைக்கப் போகிறார்களாம்.

இடிக்கப்பட இருப்பது வெறும் கல்லூரி அல்ல, வரலாறு. வரலாற்றை அழித்துவிட ஜெயலலிதாவிடம் என்ன ஒருதுடிப்பு...!!

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X