இன்சாட் செயற்கை கோளில் திடீர் கோளாறு: நாளை விண்ணில் பறக்கிறது
பெங்களூர்:
இன்று விண்ணில் செலுத்தப்பட இருந்த இந்தியாவின் இன்சாட்-3 ஏ தகவல்தொடர்பு செயற்கைக் கோள் கடைசி நேரத்தில் விண்ணில்செலுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தக் கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் நாளை செயற்கைக் கோள் விண்ணில்செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக் கோளை ஐரோப்பாவின் ஏரியன்ஸ்பேஸ் ராக்கெட் இன்று அதிகாலை விண்ணில் செலுத்த இருந்தது. தென்அமெரிக்காவில் உள்ள பிரஞ்சு கயானாவின் கொரு விண்தளத்தில் இருந்து செயற்கைக் கோள் ஏவப்பட இருந்தது.
ஆனால், ராக்கெட் கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன் செயற்கைக் கோளில் கோளாறு இருப்பதை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனவிஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அதிலிருந்து வந்த டெலிமெட்ரி சிக்னல் தெளிவில்லாமல் இருந்தது.
இதையடுத்து ராக்கெட்டை செலுத்துவதை உடனே நிறுத்த இந்திய விஞ்ஞானிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து கடைசி நேரத்தில்ராக்கெட் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் இந்திய செயற்கைக் கோளுடன் அமெரிக்காவின் பனாம்சாட் என்றதொலைத் தொடர்பு செயற்கைக் கோளும் விண்ணில செலுத்தப்பட இருந்தது.
முதலில் திட்டமிட்டபடி கடந்த பிப்ரவரி மாதத்தில் இன்சாட்-3 ஏ விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் 11ம்தேதி ஏரியன்-5 ராக்கெட் விபத்துக்குள்ளானது. விண்ணை நோக்கிக் கிளம்பிய அந்த ராக்கெட் தரையை நோக்கிப் பாய்ந்தது. இதையடுத்துஅதை வானிலேயே வெடிக்கச் செய்து தரையில் ஏற்பட இருந்த பெரும் விபத்தை விஞ்ஞானிகள் தடுத்தனர்,
இதையடுத்து ஏரியன்-5 ரக ராக்கெட்டுகள் ஏவப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது தான் அந்த ராக்கெட்டில் இருந்துகுறைபாடுகள் நீக்கப்பட்டு விண்ணில் பாயத் தயாரானது. இந் நிலையில் இன்சாட் செயற்கைக் கோளில் பிரச்சனை ஏற்பட்டதால் ராக்கெட்செலுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் நாளை இந்திய நேரப்படி அதிகாலை 4.19 மணி முதல் 5 மணிக்குள் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications