""நாங்களும் சட்டசபையை புறக்கணிப்போம்"": பா.ம.க. மிரட்டல்
சென்னை:
அதிமுக அரசின் அராஜகப் போக்கு தொடர்ந்தால் சட்டசபையைப் புறக்கணிப்பது குறித்து நாங்களும் விரைவில்முடிவு எடுக்க வேண்டி வரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
2 திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதையடுத்து தற்போது நடந்து வரும் சட்டசபை பட்ஜெட்கூட்டத் தொடரை அக்கட்சி புறக்கணித்து வருகிறது. பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இன்று அவையிலிருந்துவெளிநடப்பு செய்துள்ள காங்கிரஸ் கட்சி இன்று முழுவதும் சட்டசபையைப் புறக்கணிக்கப் போவதாகஅறிவித்துள்ளது.
இந்நிலையில் சட்டசபையைப் புறக்கணிப்பது குறித்து விரைவில் முடிவு எடுப்போம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
எதிர்க் கட்சிகளின் குரல் வளையை நெரிக்கும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.ஜனநாயக நெறிமுறைகளை மீறும் வகையில் ஆளும் கட்சி சட்டசபையில் இவ்வாறு நடந்து கொள்வதுகண்டனத்திற்குரியது.
இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை அதிமுக கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள எந்தக் கட்சியும் இந்தப்போக்கை ஆதரிக்கவில்லை. திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதையும் அரசு விலக்கிக் கொள்ளவேண்டும்.
எதிர்க் கட்சிகளுக்கு உரிய பேச்சுரிமையை அளிக்க தமிழக அரசு முன்வராத பட்சத்தில், சட்டசபையைப்புறக்கணிப்பது குறித்து பாமகவும் விரைவில் முடிவு எடுக்க வேண்டியிருக்கும்.
கட்சியின் நிர்வாகக் குழு விரைவில் கூடி இது தொடர்பாக முடிவு எடுக்கும்.
ராணி மேரி கல்லூரி போன்ற புராதனம் மிக்க கட்டடங்களை இடித்து விட்டு மெரீனாவில் அடுக்கு மாடிக்கட்டடங்களைக் கட்டுவதுதான் அதிமுக அரசின் நோக்கம். இதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம் என்றார்ராமதாஸ்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications