செல்வராஜ் கொலை வழக்கு: அல்-உம்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லும் தமிழக அரசு
சென்னை:
கோயம்புத்தூர் போலீஸ்காரர் செல்வராஜ் கொலை வழக்கில் 4 அல் உம்மா தீவிரவாதிகள் உள்பட எட்டு பேரைசென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் வழக்கு தொடரப்படும் என்றுமுதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தபோது நடு ரோட்டில் கண்டந்துண்டமாகவெட்டிக் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் ஏற்பட்ட பயங்கர மதக் கலவரத்தில் 17 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில்கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டுத்தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர்.
செல்வராஜ் கொலை தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதில் தொடர்புடைய அல்-உம்மாதலைவர் பாட்சாவின் மகன் சித்திக், முகமது அன்சாரி உள்பட 9 பேரைக் கைது செய்தனர். இவர்களில் ஷாகுல்ஹமீது என்பவர் சிறையில் இறந்து விட்டார்.
இவ்வழக்கை விசாரித்த கோயம்புத்தூர் இரண்டாவது விரைவு நீதிமன்றம் 4 பேருக்கு தூக்கு தண்டனையும், மற்ற4 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது. நீதிபதி பிரேம்குமார் இத்தீர்ப்பை வழங்கினார்.
இதையடுத்து 8 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். இது தொடர்பான மனுவை விசாரித்தஉயர் நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அனைவரையும்விடுதலை செய்தது.
இன்று சட்டசபையில் இது குறித்து பா.ஜ.க. உறுப்பினர் எச். ராஜா கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தஜெயலலிதா,
செல்வராஜ் கொலை வழக்கில் 8 பேரும் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பின்நகல் சி.பி.சி.ஐ.டிக்கு கடந்த வாரம்தான் கிடைத்தது. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான மனுவை அரசு வழக்கறிஞர்கள் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என்றார்ஜெயலலிதா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications