அரசு பஸ் மோதி போக்குவரத்துக் காவலர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் அண்ணா சாலையில் டூ வீலரில் சென்று கொண்டிருந்த போக்குவரத்துக் காவலர் அரசு பஸ் மோதி இறந்தார். இதனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். இவர் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் போக்குவரத்துக் காவலராகப்பணியாற்றி வந்தார். இன்று காலை அவர் தனது வீட்டிலிருந்து காவல் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

சைதாப்பேட்டை- அண்ணா சாலையில் உள்ள சுரங்கப் பாதையை அருகே லாரியைமுந்திச் செல்லமுயன்றார். அப்போது பின்னால் வந்தஅரசுப் பேருந்து சிவசுப்ரமணியத்தின் மீது மோதியது. அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சிவசுப்பிரமணியம் அந்த இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார். இதனால் அப் பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

போலீசார் வந்து அவரது உடலை அகற்றிய பின்னர் தான் அண்ணா சாலையில் மீண்டும் போக்குவரத்து சரியானது. அந்த அரசுப் பேருந்தைகாவல்துறை கைப்பற்றியுள்ளது. டிரைவர் தப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+