For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா போலீசால் என் உயிருக்கு ஆபத்து: ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போலீஸார் என் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர். இதைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை.துணிச்சலுடன் சந்திப்பேன் என்று நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணிசெயலாளர் ஸ்டாலின் கூறினார்.

மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம்பேசுகையில்,

முறையான ஆவணங்கள் இல்லாமல் என்னைக் கைது செய்துள்ளனர். என்ன காரணத்திற்காகஎன்னைக் கைது செய்துள்ளனர் என்ற தகவலைக் கூட என்னிடம் தெரிவிக்கவில்லை.

முதல் தகவல் அறிக்கையைக் கூட அவர்கள் பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக நாங்கள்மாஜிஸ்திரேட்டிடம் கூறிய பிறகு அவரது வீட்டில் வைத்துதான் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்போலீசார். இப்படி ஒரு முறையில்லாமல் அனைத்து விதிகளையும் மீறி போலீஸார் நடந்துகொண்டுள்ளனர்.

முறையான ஆவணம் இல்லாததால் காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதிமுதலில் தெரிவித்தார். அதுவரை போலீஸ் காவலில் வைத்திருக்கும்படியும் அவர் கூறினார்.

ஆனால் போலீஸ் காவலில், அதுவும் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் பொய் வழக்குப்போட்டுள்ள போலீஸாரின் காவலில் நான் இருந்தால் எனது உயிருக்கே ஆபத்து ஏற்படும். இந்தப்போலீசாரிடம் ஜெயலலிதா என்னைக் கொல்லக் கூட சொல்வார்.

எனவே நீதிமன்றக் காவலிலேயே என்னை அனுப்புங்கள் என்று கூறினேன். இதை ஏற்றுக் கொண்டநீதிபதி என்னை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

ஒரு கல்லூரி மாணவிகளின் போராட்டத்தை ஆதரித்தது குற்றமா? அதற்காக ஒரு கைது என்றால்இந்த மாநிலத்தின் நிலையை நினைத்து கவலைப்படுகிறேன் என்றார் ஸ்டாலின்.

கடலூர் சிறை வாசலில்...

பின்னர் கடலூர் மத்திய சிறைக்கு ஸ்டாலின் கொண்டு செல்லப்பட்டார். கடலூர் சிறை வாசலில்அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

எம்.ஜி.ஆர். சமாதி, அண்ணா சமாதி ஆகியவற்றைக் கடந்த சென்றால் அவரால் முதல்வர் பதவியில்நீடிக்க முடியாது என்று ஜெயலலிதாவின் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்துதான்வரலாற்றுப் புகழ்மிக்க ராணி மேரி கல்லூரியை இடித்து விட்டு அங்கு ரூ.100 கோடி செலவில்ஆடம்பரமான தலைமைச் செயலகம் கட்டும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்.

இதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தி வந்த மாணவிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகத்தான்அக்கல்லூரிக்கு நான் சென்றேன். திமுக தலைவர் கருணாநிதியின் ஆதரவை மாணவிகளுக்குத்தெரிவித்தேன்.

இதை அனைத்துத் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின. அப்போதெல்லாம் எந்த அசம்பாவிதசம்பவமும் நடைபெறவில்லை. ஆனால் ராணி மேரி கல்லூரி காவலாளியைத் தாக்கி நாங்கள்உள்ளே நுழைந்ததாகப் பொய் வழக்கு சுமத்தி நள்ளிரவில் எங்களைக் கைது செய்துள்ளனர்.

இதுபோன்ற சர்வாதிகார அடக்கு முறைகள் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. நாங்கள் மிசாவையேசந்தித்தவர்கள் என்பதால் வேறு எதையும் சந்திக்கத் தயாராகவே உள்ளோம். எதற்கும் அஞ்சமாட்டோம்.

தமிழக மக்கள் விரைவில் இந்த சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள் என்றார் ஸ்டாலின்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X