நியூயார்க்குக்கு இந்தியா 1.6 கோடி டாலர் வரி பாக்கி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

நியூயார்க் நகர நிர்வாகத்துக்கு இந்தியா சுமார் 1.6 கோடி டாலர் கட்டட வரி பாக்கி வைத்துள்ளது. இந்த வரியைஉடனே கட்டுமாறு நியூயார்க் கோரியுள்ளது.

நியூயார்க்கில் இந்தியாவுக்கு பிரம்மாண்டமான தூதரகம் உள்ளது. அதை ஒட்டி தூதர ஊழியர்களுக்கானஅபார்மெண்ட்டும் உள்ளது.

மேலும் ஐ.நா. சபையின் அருகே ஒரு பல மாடிக் கட்டடமும் உள்ளது. இந்தக் கட்டடத்தை 1985ம் ஆண்டில்இந்தியா விரிவாக்கியது. இதில் தான் ஐ.நாவுக்கான இந்திய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந் நிலையில மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நியூயார்க் நிர்வாகம் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதில்,வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சொந்தமான கட்டடங்களுக்கு வரி விலக்கு தர வியன்னா ஒப்பந்தத்தில் விதிஉள்ளது. ஆனால், அது தூதரக ஊழியர்களின் வீட்டு கட்டடங்களுக்கு வரி விலக்கு பொறுந்தாது.

எனவே, இந்திய வெளியுறவுத்துறை உடனே நியூயார்க் நிர்வாகத்துக்கு 1,63,76,702 டாலர்களை வரியாக செலுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பிலிப்பைன்ஸ், மங்கோலியா, துருக்கி நாடுகளிடம் வரி கோரி நியூயார்க் நிர்வாகம் வழக்குத்தொடர்ந்துள்ளது.

நியூயார்க் நகர நிர்வாகத்துக்கு 3.4 பில்லியன் டாலர் அளவுக்கு பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைஈடுகட்ட இது போன்ற கட்டாய வரி வசூல் நடவடிக்கைகளில் அந்நகர மேயர் ஈடுபட்டுள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+