ராணி மேரி கல்லூரியை இடிக்க இடைக்கால தடை நீட்டிப்பு
சென்னை:
சென்னை ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை இன்று வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர்அடங்கிய முதலாவது பெஞ்ச் இந்த நீட்டிப்பை வழங்கியது.
முன்னதாக, கல்லூரியை உடனடியாக இடிக்க மாட்டோம் என்று அரசு உறுதிமொழி கொடுக்குமாஎன்று நீதிபதிகள் கேட்டபோது, அதுபோன்ற உறுதிமொழியை அளிக்க முடியாது என்று தமிழக அரசுவழக்கறிஞர் என்.ஆர். சந்திரன் கூறினார்.
அவர்க கூறுகையில், அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கல்லூரியை உடனடியாகஇடிக்கும் திட்டமில்லை என்றும் விடுதி, உணவகம் மூடப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.எனவே உறுதிமொழி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
அப்போது குறுக்கிட்ட மாணவிகள் தரப்பு வக்கீல் வைகை கூறுகையில், "கல்லூரி தற்போதுமூடப்பட்டள்ளது. விடுதியும், உணவகமும் கூட மூடப்பட்டுக் கிடக்கிறது. மாணவிகள் வெட்டவெளியில் மரத்தடியில் பட்டினியுடன் படித்து வருகிறார்கள். அரசு தனது உறுதிமொழியைமீறிவிட்டது" என்றார்.
அப்போது குறுக்கிட்ட சந்திரன், விடுதியும் உணவகமும் மூடப்பட்டது கல்லூரியைப் பொறுத்தவிஷயம். மாணவிகளும், ஆசிரியைகளுமே இந்த சூழ்நிலை ஏற்படக் காரணம் என்றார்.
இதைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை நீதிபதிகள் இன்றைக்கு ஒத்திவைத்தனர். ராணிமேரி கல்லூரியை இடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை இன்று வரைநீட்டிக்கவும் அவர்கள் உத்தரவிட்டனர்.


