சித்திரை திருவிழா: மதுரையில் ஏற்பாடுகள் தீவிரம்
மதுரை:
சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரை நகரில் பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுவருவதாக மாநகராட்சி கமிஷனர் கார்த்திக் கூறியுள்ளார்.
மதுரையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சிநிர்வாகம் செய்து வருகிறது.
வழக்கத்திற்கு மாறாக இம்முறை மதுரையில் உள்ள அனைத்து சாலைகளையும் பளபளவெனசுத்தமாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
சாலைகளைச் சுத்தப்படுத்தும் பொறுப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு திருவிழா முடிந்த பிறகுதான்சம்பளம் தரப் போகிறோம்.
கள்ளழகர் செல்லும் வழியில் பிரகாசமான ஒளி விளக்குகளை அதிகம் பொருத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. வழக்கமாக உள்ள 32 விளக்குகளுக்குப் பதில் 100 விளக்குகள்பொருத்தப்படும்.
கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சிக்காக ரூ.1.5 லட்சம் செலவில் புதிதாக சிமெண்ட் மேடைஅமைக்கப்படும் என்றார் கார்த்திக்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையிலிருந்து விரைவில் தண்ணீர்திறந்து விடப்படும். தண்ணீர் தடங்கல் இல்லாமல் வருவதற்காக மதுரையில் வைகை ஆற்றைசுத்தப்படுத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
16ம் தேதி அழகர் ஆற்றில் இறங்குகிறார்:
இதற்கிடையே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வரும் 16ம் தேதி காலைநடைபெறுகிறது.
அழகர் கோவிலிலிருந்து நாளை கள்ளழகர் வேடம் பூண்டு அழகர் கிளம்புகிறார். பின்னர் 15ம் தேதிதல்லாகுளத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது.
இதையடுத்து 16ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றுகாலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் அழகர் ஆற்றில் இறங்குகிறார்.
மொத்தம் 15 லட்சம் பக்தர்கள் இதைக் காண மதுரையில் வந்து குவிந்து விடுவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பக்தர்களுக்குத் தேவையான கழிப்பறை, குடிநீர் வசதியைமாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
பின்னர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு 17ம் தேதி காலை 5 மணிக்கு வரும் அழகர், அங்கிருந்துதேனூர் மண்டகப்படிக்குச் செல்கிறார். அன்று இரவு 9 மணிக்கு தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பின்னர் 19ம் தேதி பூப்பல்லக்கில் அவர் அழகர்கோவிலுக்குத் திரும்புகிறார்.
சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும்செய்யப்பட்டுள்ளன.


