""கருணாநிதி மறியல் செய்தால்...."" : ஜெயாவின் கிண்டல் உத்தரவு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி சாலை மறியல் செய்தால் அவரைப் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு போய்அவருடைய இல்லத்தில் விட்டுவிட போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
திமுக எம்.எல்.ஏக்கள் கைது, எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம் ஆகியவை தொடர்பாகசட்டசபையில் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் கூறுகையில்,
42 எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சாலை மறியல் செய்து கைதாகி, கடற்கரை காவல் நிலையத்தில்வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களைப் பார்ப்பதற்காக கருணாநிதிசெல்வதாகக் கேள்விப்பட்டேன்.
உடனடியாகக் காவல் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, "எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களைகருணாநிதி வெறுமனே பார்த்துவிட்டுத் திரும்பினால் ஒன்றும் செய்ய வேண்டாம்.
ஆனால் அவரும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் இறங்கினால் அவரைப் பத்திரமாகத்தூக்கிக் கொண்டுபோய் அவருடைய வீட்டில் விட்டு விடுங்கள்" என்று போலீசாருக்குஉத்தரவிட்டேன்.
நல்லவேளையாக அப்படிப்பட்ட சாகசங்களில் கருணாநிதி ஈடுபடவில்லை. 42 எம்.எல்.ஏக்களுடன்சேர்ந்து உட்கார்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துவிட்டு அறிவாலயத்திற்குக் கிளம்பிச் சென்றுவிட்டார் என்றார் ஜெயலலிதா.


