சாலைகளை மறித்து பொதுக் கூட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:
தமிழகத்தில் முக்கியமான சாலைகளை மறித்து, மேடை போட்டு பொதுக் கூட்டங்களைநடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் நிரந்தரமாகத் தடை விதித்துள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் தொடரப்பட்ட ஒரு வழக்கில்,சாலைகளை மறித்து பொதுக்கூட்டம் நடத்தத் தடை விதித்து கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
ஆனால் ஒட்டுமொத்தமாக இந்தத் தடை விதிக்கப்பட்டது சரியல்ல என்று அப்போது தமிழக அரசுகூறியது.
ஆனால் சாலைகளை மறித்து மேடை அமைத்து பொதுக்கூட்டம் நடத்த ஒருபோதும் அனுமதிஅளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உறுதியாகக் கூறிவிட்டது. மேலும் இது தொடர்பாக விளக்கம்அளிக்கவும் தமிழக அரசுக்கு அது உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளை மறித்து, மேடை அமைத்துபொதுக்கூட்டங்களை நடத்த தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைசெயல்படுத்துவதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மேலும் உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுதொடர்பாக விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுவிளக்கம் அளித்தது.
இந்நிலையில் இது தொடர்பாக நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி வெங்கடராம ரெட்டிஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
தமிழகத்தில் முக்கிய சாலைகளை மறித்து, மேடை அமைத்து பொதுக்கூட்டம் நடத்துவதற்கு நிரந்தரத்தடை விதிப்பதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.


