விழுப்புரம் அருகே வேன்-பஸ்-லாரி மோதல்: 6 பேர் பலி, 29 பேர் காயம்
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் வேன் மீது லாரியும் பஸ்சும்மோதியதில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 29 பேர் படுகாயமடைந்தனர்.
இலங்கையைச் சேர்ந்த 10 பேர் சுற்றுலாவுக்காக தமிழகம் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் வேன் மூலம்வேளாங்கண்ணிக்குச் சென்றனர். தரிசனம்முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
விக்கிரவாண்டி அருகே உள்ள பேரணி ஆற்றுப் பாலத்தின் மீது அவர்களது வேன் வந்தபோது எதிரே வந்த லாரிபயங்கரமாக மோதியது. அதைத் தொடர்ந்து வந்த பஸ் லாரி மற்றும் வேன் மீது மோதியது.
இதில் வேனில் பயணம் செய்த 4 பேரும், லாரியின் கிளீனரும், பஸ்சின் டிரைவரும் பலியாயினர். முதலில் லாரிமோதியதால் நசுங்கிய வேன் அடுத்த வந்த பஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்டது.
இதில் பஸ் மற்றும்வேனில் இருந்த 29 பேர் படுகாயமடைந்தனர்.
லாரியும் பஸ்சும் காட்டுத்தனமான வேகத்தில் கட்டுப்பாடே இல்லாமல் வந்ததே விபத்துக்குக் காரணம் என்றுதெரிகிறது.
காயமடைந்தவர்கள் அனைவரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


