For Daily Alerts
Just In
காழ்ப்புணர்ச்சியை கைவிட ஜெவுக்கு இளங்கோவன் அறிவுரை
சென்னை:
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதைமுதல்வர் ஜெயலலிதா கைவிட வேண்டும் என்று தமிழககாங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவது, எதிர்க் கட்சியினரைப் பழி வாங்குவது போன்றவற்றை ஜெயலலிதாகைவிட வேண்டும்.
ஜெயலலிதா அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருப்பது நல்ல விஷயம்தான்.அதற்கு காங்கிரஸ் கட்சிமுழு மனதுடன் ஆதரவு தரும்.
நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கும் செயலாகஅமைந்துள்ளது. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் இது போன்ற செயல்களை ஜெயலலிகா உடனேநிறுத்திக் கொள்வது தமிழ்நாட்டுக்கு நல்லது என்றார்.


