For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் தீவிரவாதிகளுடன் சதி செய்தார் கோபால்: சிபிசிஐடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழர் விடுதலைப் படைத் தீவிரவாதிகள், வீரப்பன் ஆகியோருடன் சேர்ந்து தனித் தமிழகத்தை உருவாக்க நக்கீரன்ஆசிரியர் கோபால் சதி செய்ததாகவும் அதனால் தான் அவர் கைது செய்யப்பட்டதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்கூறியுள்ளார்.

நேற்றிரவு கோபாலை எந்தக் காரணமும் சொல்லாமல் போலீசார் கைது செய்தனர். இது குறித்து கோபாலின்வழக்கறிஞர்கள் மத்திய சிறையில் போலீசாரிடம் கேள்வி எழுப்பியபோதும் கூட பதில் கிடைக்கவில்லை.

இந் நிலையில் கோபால் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி.போலீசார் அறிக்கைவெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

போலீசாரின் உளவாளிகளைக் கொல்வதற்கு வீரப்பனுக்கு நக்கீரன் கோபால் உதவினார். அதிரடிப்படைக்குவீரப்பன் குறித்து உளவு சொன்ன ராஜாமணியை வீரப்பனுக்குக் காட்டிக் கொடுத்ததே கோபால் தான். பின்னர்ராஜாமணியை வீரப்பன் வெட்டிக் கொன்றார்.

மேலும் வீரப்பனுடன் உள்ள தமிழர் விடுதலைப் படைத் தீவிரவாதிகளுடன் சேர்ந்து தனித் தமிழ்நாட்டைஉருவாக்கும் சதித் திட்டத்தையும் கோபால் தீட்டியிருந்தார். இந்தக் காரணங்களால் அவர் கைது செய்யப்படடார்.

கைது செய்யப்பட்ட கோபாலிடம் இருந்து உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, 2 துப்பாக்கிக் குண்டுகள், தடைசெய்யப்பட்ட தமிழர் விடுதலைப படை தீவிரவாத இயக்கத்தின் ஆவணங்களும் துண்டுப் பிரசுரங்களும்கைப்பற்றப்பட்டுள்ளன. அவர் மீது ஆயுத சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சி.பி.சி.ஐ.டி. குற்றம் சாட்டியுள்ளது.

கோபால் மீது மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொய் வழக்குகள்:

ஆனால், கோபாலின் வழக்கறிஞர் பரசுராம் நிருபர்களிடம் பேசுகையில், நேற்றிரவு அலுவலக வாயிலில் வைத்துகோபாலை மடக்கிய போலீசார் ஒரு விசாரணைக்காக சத்தியமங்கலம் காவல் நிலையத்து வருமாறு கூறி வேனில்ஏற்றினர்.

ஆனால், இரவு முழுவதும் சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில்துன்புறுத்தியுள்ளனர். இதன் பின்னர் காலையில் நீதிபதி வீட்டுகுக்குக் கொண்டுபோய் ஆஜர்படுத்தி சிறையில்தள்ளியுள்ளனர்.

கோபாலைப் பிடித்தபோது அவரிடம் நாட்டுத் துப்பாக்கி, டி.என்.எல்.எப். அமைப்பின் ஆவணங்கள் இருந்ததாகபொய்யாக வழக்குகளைப் போட்டுள்ளனர். போலீசாரின் இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றார்.

ஜெவுக்கு கர்நாடக அமைச்சர் ஏக வசனத்தில் திட்டு:

திமுக தலைவர் கருணாநிதி மூலம் வீரப்பனுக்கு பணம் ஏதும் தரப்படவில்லை என கர்நாடக உள்துறை அமைச்சர்மல்லிகார்ஜூன கார்கே திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நிருபர்களிடம் பேசிய அவர், முன்னாள் டி.ஜி.பி. தினகரின் குற்றச்சாட்டு தவறானது. யார் மூலமும் வீரப்பனுக்குபணம் தந்து ராஜ்குமாரை மீட்கவில்லை. ஜெயலலிதாவுக்கு வேறு வேலை கிடையாது. எதையெடுத்தாலும் அரசியல்செய்யும் அசிங்கமான ஜெயலலிதா குறித்து மேலும் பேச விரும்பவில்லை என்றார். (முதல்வர் ஜெயலலிதாவைக்குறிப்பிடும்போதெல்லாம் ஒருமையில் அவள், இவள் என்று தான் அவர் குறிப்பிட்டார்).

இளங்கோவன் கோரிக்கை:

நக்கீரன் ஆசிரியர் கோபால் தனது பத்திரிக்கையில் ஜெயலலிதா அரசின் ஊழல்களை வெளியிட்டதால் தான்அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடனே அவரை விடுவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன் கூறியுள்ளார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X