• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சட்டசபையில் காதை கிழிக்கும் ஹக்கீமின் ஜால்ரா

By Staff
|

சென்னை:

சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்யும் எம்.எல்.ஏக்கள் அல்லது வெளியேற்றப்படும் எம்.எல்.ஏக்களின்பேட்டிகளை பிரசுரிக்கவோ டிவிகளில் ஒளிபரப்பவோ கூடாது என்று பத்திரிக்கையாளர்களுக்கு சபாநாயகர்காளிமுத்து தடைவிதித்துள்ளார்.

சட்டசபையில் அரசைக் கண்டித்து எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்கள் பேசவே அனுமதிக்கப்படுவதில்லை. மீறிபேசினாலும் அது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விடுகிறது. இதனால் எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்கள்வெளிநடப்பு செய்கின்றனர்.

அவ்வாறு வெளியே வரும் எம்.எல்.ஏக்கள் அவையில் தாங்கள் பேசியதையும் அதற்கு அனுமதிமறுக்கப்பட்டதையும் விளக்குகின்றனர். இப்போது இதையும் கூட பிரசுரிக்கக் கூடாது என்று காளிமுத்துஉத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை மீறும் பத்திரிக்கையாளர்கள் சட்டசபை நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் வாய்ப்பை இழப்பார்கள்.சட்டசபைக்குள் அவர்கள் நுழையவும் முடியாது என்றும் காளிமுத்து கூறியுள்ளார்.

காளிமுத்துவின் இந்தத் தடையுத்தரவு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மக்கள் பிரச்சனைகளை விவாதிப்பதைவிட ஜெயலலிதா புராணம் பாடுவதைத்தான் பார்க்க முடிகிறது. அம்மா, தாயே என அவர்கள் புகழாரம் சூட்டுவதும் எப்படியாவது முதல்வர் முகத்தில்சிரிப்பை வரவழைத்துவிட வேண்டும் என்பதற்காக சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுவதையுமே கேட்க முடிகிறது.

குறிப்பாக சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்த மதுரை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹக்கீம் அடிக்கும் ஜால்ரா சத்தம்ஒரிஜினல் அதிமுக எம்.எல்.ஏக்களின் காதையே கிழித்துவிடுகிறது.

ஹக்கீம் பேச்சின் ஹை-லைட்ஸ்:

* நல்லவேளையாக நான் அதிமுகவில் சேர்ந்தேன். இல்லாவிட்டால் இப்போது வெளிநடப்பு செய்துவிட்டுவெளியே போயிருக்கும் எதிர்க்கட்சியினருடன் நானும் தெருவில் திரிய வேண்டியதிருக்கும்.

* கருணாநிதி சாலைமறியல் செய்தால் அவரை அப்படியே தூக்கிப்போய் வீட்டில் விடுங்கள் என்று அம்மாகூறியுள்ளார். எதிர்க்கட்சியினர் மீது அவருக்கு உள்ள பரிவை இப்போதாவது புரிந்து கொள்ளவேண்டும்.

* கருணாநிதி ஒரு மஞ்சளாடை மடாதிபதி. அவர் சட்டசபைக்கே வரமாட்டாராம். இதன் மூலம் சேப்பாக்கம்தொகுதியையும் தமிழ்நாட்டையும் மோசடி செய்துவிட்டார்.

* ஒரு கன்று தனது தாயான பசுவைத் தேடிப்போனால் புல்லைச் சாப்பிடும். அதை விட்டுவிட்டு வேறு ஏதாவதுவிலங்குடன் போனால் வேறு எதையாவதுதான் சாப்பிடும்.

* சட்டசபைக்குள்ளேயே இவ்வளவு ரகளை பண்ணுகிற இவர்கள் (திமுகவினர்) பெண்கள் மட்டுமே படிக்கக் கூடியராணிமேரிக் கல்லூரிக்குள் போனால் என்னவாகும்?

* கருணாநிதி இந்தி எதிர்ப்புக்காக போராடி பாளையங்கோட்டையில் பாம்பு, பல்லிகளுக்கிடையே இருந்தாராம்.இதைப் பாடலாகவும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் கருணாநிதியைக் கடித்த பல பாம்புகள்செத்துவிட்டன. அவ்வளவு விஷம்.

* நடுச் சாலையில் போய் உட்கார்ந்து போராட்டம் நடத்துகிறார்களே எதிர்க் கட்சிகள் கொஞ்சமாவது யோசித்துப்பார்த்தார்கள. பிரேக் பிடிக்காத லாரி கீரி வந்து ஏற்றினால் 39 இடைத் தேர்தல்களை அல்லவா சந்திக்க வேண்டிவரும். அப்படியே இடைத் தேர்தல் நடந்தாலும் ஒரு இடம் கூட உங்களுக்கு (எதிர்க் கட்டிகளுக்கு) கிடைக்காதே.இனிமேல் யோசிச்சு போராட்டம் நடத்துங்கள்.

ஹக்கீம் பேசுகையில் முதல்வர் ஜெயலலிதா விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X