For Daily Alerts
Just In
மதுரையில் 10,000 பேருக்கு தமிழ்ப் பெயர்கள்: விடுதலை சிறுத்தைகள் திட்டம்
சென்னை:
மதுரையில் ஏப்ரல் 14ம் தேதியன்று நடைபெறும் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சியின்போது 10,000 பேருக்குசுத்தமான தமிழ்ப் பெயர்களை சூட்ட விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இதில் பெரும்பாலானவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களில்பெரும்பாலானவர்கள் தலித்களாவர்.
இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் பேசிய அக் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன்
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14ம் நாள் மதுரையில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக்கண்டித்து 10,000 பேருடைய இந்துப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக மாற்றப்படும்.
ராணிமேரிக் கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நள்ளிரவில் வீடு புகுந்து ஸ்டாலினை கைதுசெய்தது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார்.


