கருணாநிதியை விமர்சிக்க ஜெயலலிதாவுக்கு அருகதையில்லை: வைகோ
நாகப்பட்டனம்:
சினிமாவில் மட்டுமே போராட்டங்களைச் சந்தித்துள்ள ஜெயலலிதா 14 வயதிலிருந்தே தமிழர்களுக்காகப்போராட்டங்களைச் சந்தித்து பலமுறை சிறை சென்றுள்ள திமுக தலைவர் கருணாநிதியை விமர்சனம் செய்வதாஎன மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேளவி எழுப்பினார்,
மயிலாடுதுறையில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தல் தகராறில் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும்இடையே மோதல் மூண்டது. இது தொடர்பாக வைகோ, கோ.சி.மணி உள்ளிட்டவர்கள் மீது நாகப்பட்டிணம்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இப்போது அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்குத் தொடர்பாக வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்குப் பின்செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
தனது 14 வயதிலிருந்தே அரசியல்களம் கண்டு எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்து பலமுறை சிறை சென்றுவந்துள்ள திமுக தலைவர் கருணாநிதியை சினிமாவில் மட்டுமே போராட்டங்களைப் பார்த்துள்ள ஜெயலலிதாவிமர்சனம் செய்வது கேலிக்குறியது.
அதற்கான அருகதை ஜெயலலிதாவுக்குக் கிடையாது.
சட்டசபையில் மட்டும் ஜனநாயகப் படுகொலை நடக்கவில்லை. மொத்த தமிழ்நாட்டையுமே ஜனநாயகப்படுகொலைக் களமாக மாற்றிவிட்டார் ஜெயலலிதா.
எல்லாத் துறைகளிலும் ஜனநாயக நடைமுறைகளை காலில் போட்டு மிதித்து வருகிறார் ஜெயலலிதா. தவிர்க்கமுடியாத நிலையில் போராட்டம் நடத்திய ராணிமேரிக் கல்லூரி மாணவிகளைச் சந்தித்து தார்மீக ஆதரவு அளித்தஸ்டாலினை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ததன் மூலம் தமிழக காவல்துறைக்கு தீராத களங்கம்ஏற்பட்டுவிட்டது என்றார் வைகோ.


