7 மரண தண்டனை கைதிகள் விடுதலை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை:
7 மரண தண்டனை மற்றும் 7 ஆயுள் தண்டனை கைதிகளை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலைசெய்து உத்தரவிட்டது.
கடந்த 1998ம் ஆண்டு தூத்துக்குடியில் 6 பேர் பஸ்சுடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்தப்பயங்கரமான சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 7 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.மேலும் ரூ.9.69 லட்சம் அபராதமும் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து 14 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். அப்பீல்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 14 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது.
போலீசார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள்உள்ளன. மேலும் குற்றவாளிகள் மீதான புகார்கள் உறுதியாக நிரூபிக்கப்படாததால் அவர்கள்விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


