For Quick Alerts
For Daily Alerts
Just In
ஓடும் ரயிலிலிருந்து விழுந்து சட்டக் கல்லூரி மாணவர் பலி
மதுரை:
மதுரை அருகே கப்பலூர் என்ற இடத்தில் ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து சட்டக் கல்லூரிமாணவர் பரிதாபமாக பலியானார்.
மதுரையைச் சேர்ந்த இந்த மாணவர் திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் படித்து வந்தார்.
மதுரையில் உள்ள தன் பெற்றோரைப் பார்த்து விட்டு திருநெல்வேலிக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தார்.
ரயிலின் கதவோரத்தில் நின்று கொண்டிருந்த அவர் கப்பலூர் அருகே திடீரென்று நிலை தடுமாறிரயிலை விட்டுக் கீழே விழுந்து விட்டார்.
இதில் ரயில் சக்கரத்தில் சிக்கி அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார் அவர்.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


