தமிழக அரசை கலைக்க மத்திய அரசை வற்புறுத்த திமுக, பாமக முடிவு
சென்னை:
அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்றுமத்திய அரசை வற்புறுத்த திமுகவும் பாமகவும் முடிவு செய்துள்ளன.
கடந்த 1991ல் 356வது அரசியல் சட்டப் பிரிவைப் பயன்படுத்திதான் தமிழகத்தில் திமுக ஆட்சியைமத்திய அரசு கவிழ்த்தது. அதிலிருந்து 356 என்றாலே திமுக தலைவர் கருணாநிதிக்குவேப்பங்காயாகத்தான் கசக்கும். இந்தச் சட்டப் பிரிவு பயன்படுத்தப்படுவதை அவர் கடுமையாகஎதிர்த்து வந்தார்.
இந்நிலையில் 356வது அரசியல் சட்டப் பிரிவை மத்திய அரசு பயன்படுத்தவில்லை என்பதைக்கோடிட்டு சுட்டிக் காட்டியுள்ளார் கருணாநிதி.
அரசியல் சட்டத்தின் 356வது பிரிவு என்ற நச்சுப் பாம்பு சீறுவதற்குக் கூட மறந்து விட்டது என்றுநேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக அராஜக ஆட்சி நடத்தி வருவதாகவும் அந்த ஆட்சி மீது மத்தியில் உள்ளபா.ஜ.க. அரசு நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பதையுமே கருணாநிதி மறைமுகமாகச்சுட்டிக் காட்டியுள்ளார்.
எனவே 356 என்ற ஆயுதத்தைத் தற்போது கருணாநிதி உயர்த்திப் பிடித்துள்ளதை மிகவும்முக்கியமான திருப்பு முனையாகத் தமிழக அரசியல் கட்சிகளும், அரசியல் நோக்கர்களும்கருதுகின்றனர்.
கருணாநிதியின் இந்த முயற்சிக்கு பாமகவும் ஆதரவு அளிக்கத் தொடங்கியுள்ளது.சென்னை-கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்குச் சென்ற பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் அவரைச் சந்தித்து இது தொடர்பாகப் பேச்சு நடத்தினார். பாமக தலைவர் ஜி.கே. மணியும்இந்தச் சந்திப்பின்போது உடன் இருந்தார்.
திமுகவும் பாமகவும் தற்போது மத்திய அரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம்வகித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசைக் கலைப்பதற்கு காங்கிரஸ்உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் பாமக கோரியுள்ளது.
அதிமுக அரசுக்கு எதிரான எதிர்க் கட்சிகளின் இந்தத் திருப்பு முனைப் போராட்டம் எந்த அளவுக்குப்பலன் கொடுக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.


