திருப்பாச்சேத்தியில் வேன் மோதி 3 பெண்கள் பரிதாப சாவு
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி என்ற இடத்தில் வேன் மோதி 3 பெண்கள் பலியாயினர்.மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த 7 பெண்கள் துத்தை என்ற இடத்தில் வயல் வேலைக்கு சென்றனர்.வேலை முடிந்த பின்னர் இரவு 7 மணிக்கு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மானாமதுரையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற வேன் இவர்கள் மீது மோதியது. இதில் 3பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த பெண்கள் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் மீது மோதிய வேனை சிலர் வண்டிகளில் துரத்திச் சென்றனர். ஆனால் நிற்காமல் சென்றவேன் டீசல் தீர்ந்த காரணத்தால் திருப்புவனத்தில் நின்று விட்டது.
ஆயினும் வேன் டிரைவர் தப்பியோடி விட்டார். கிளீனர் மட்டும் பிடிபட்டார். டிரைவரைப் போலீசார்தேடி வருகின்றனர்.


