லாரிகள் ஸ்டிரைக்: காய்கறி விலை கிடுகிடு உயர்வு- பஸ்களை பயன்படுத்த அரசு முடிவு
சென்னை:
நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால்காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.இதையடுத்து ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் பொருட்களை பஸ்கள் மூலம் கொண்டு செல்ல அரசுமுயற்சி மேற்கொண்டுள்ளது.
அடிக்கடி டீசல் விலை உயர்த்தப்படுவது, லாரிகளுக்கு புதிய சுங்க வரிகள் விதிக்கப்பட்டிருப்பது,15 ஆண்டுகளுக்கு மேலான பழைய லாரிகளுக்குத் தடை விதித்திருப்பது உள்ளிட்ட பலவற்றைஎதிர்த்து லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் லாரி போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சுமார் 30லட்சம் லாரிகள் நேற்றிலிருந்து ஓடவில்லை. தமிழகத்தில் மட்டும் 1.8 லட்சம் லாரிகள்வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டுசெல்லப்படுவது கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள்இரண்டு மடங்கு வரை உயர்ந்துள்ளன.
முட்டை, மீன் ஆகிய உணவுப் பொருட்கள் ஆங்காங்கே தேங்கிக் கொண்டுள்ளதால் அப்பகுதிகள்நாற்றமெடுக்க ஆரம்பித்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள்ஈடுபட்டுள்ளனர்.
காஸ் டேங்கர் லாரிகளும் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளதால் சமையல் எரிவாயு விநியோகமும்பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் விநியோகமும் விரைவில் பாதிக்கப்படும் என்றுஅஞ்சப்படுகிறது. இதனால் இவற்றின் விலைகளும் கடுமையாக அதிகரிக்கும் அபாயம்ஏற்பட்டுள்ளது.
லாரிகளைப் போலவே தமிழகத்தில் வேன் உரிமையாளர்களும் வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் வரையில் லாரி, வேன் டிரைவர்களுக்கும்கிளீனர்களுக்கும் சம்பளம் கிடைக்காது.
தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தமிழக லாரிஉரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செங்கோடன் தெரிவித்துள்ளார். இந்த வேலைநிறுத்தம்காரணமாக தமிழக அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்படும் என்றுமதிப்பிடப்பட்டுள்ளது.
பஸ்கள் மூலம்...
இதற்கிடையே காய்கறி உள்ளிட்ட பொருட்களை பஸ்களில் ஏற்றிச் செல்ல தமிழக அரசு நடவடிக்கைஎடுத்து வருகிறது.
லாரி ஸ்டிரைக் தொடர்ந்தால் காய்கறிகளின் வரவு முற்றிலும் குறைந்து போய்விடும் எனகோயம்பேடு வியாபாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும் மதுரை போன்ற ஊர்களிலிருந்து கேரளாவுக்குக் காய்கறிகளை அனுப்ப முடியாததால்அவையும் தேங்கிப் போயுள்ளன.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் காய்கறிகளை அரசு மற்றும்தனியார் பஸ்கள் மூலம் ஏற்றிச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக பஸ்களில் உள்ள சில பின் சீட்டுக்களை அகற்றி விட்டு அந்த இடத்தில் காய்கறிக்கூடைகளை ஏற்றிச் செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது.


