For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அரசை எதிர்த்து 24ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசைக் கலைக்க மத்திய அரசுக்குக்கோரிக்கை விடுப்பது குறித்து வரும் 24ம் தேதி நடக்கவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்முடிவெடுக்கப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை-கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்ற டாக்டர்ராமதாஸ் அவரைச் சந்தித்துப் பேசினார். பாமக தலைவர் ஜி.கே. மணியும் அப்போது உடன்இருந்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் டாக்டர் ராமதாஸ்பேசுகையில்,

அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி ஜெயலலிதா அரசைக் கலைக்க வேண்டும்என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.

நாளைக்கே இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றால்கூட தமிழக மக்கள் அதற்கும்தயாராகத்தான் உள்ளனர். விரைவில் மற்றொரு சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க அனைத்து தரப்புமக்களும் ஆவலாக உள்ளனர்.

வரும் 24ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கவுள்ளது. அப்போது 356வது பிரிவைப்பயன்படுத்தி தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்பது குறித்து விரிவான ஆலோசனைநடத்தப்படும்.

அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசைக் கலைக்கும் விஷயத்தில்காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும்.

தமிழக சட்டசபையின் தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரை திமுக புறக்கணித்து வருகிறது.நாங்களும் இதுகுறித்து விரைவில் முடிவெடுப்போம் என்றார் டாக்டர் ராமதாஸ்.

கருணாநிதி பேட்டி:

இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில்,

தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதுபற்றி மத்திய அரசிடம் ஏற்கனவேதிமுக பல்வேறு புகார்களைக் கூறியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் மூலம் நல்லதொரு கருத்து வந்து சேர்ந்துள்ளது.

இது குறித்து 24ம் தேதி நடக்கவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும்என்றார் கருணாநிதி.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பா.ஜ.கவை அழைப்பீர்களாக என்று நிருபர்கள் கேட்டபோது,"ஜெயலலிதாவின் அலங்கோல ஆட்சிக்குதான் பா.ஜ.கவினர் ஆதரவு தெரிவித்துக்கொண்டிருக்கிறார்களே. தமிழகத்தில் ஏற்கனவே அக்கட்சிக்கும் எங்களுக்கும் இடையிலான உறவுமுறிந்து விட்டது" என்று கருணாநிதி பதிலளித்தார்.

இதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறுமா என்று கேட்டதற்கு,இதுகுறித்து இன்னும் நாங்கள் எதுவும் முடிவு செய்யவில்லை என்றார் கருணாநிதி.

"சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள "நக்கீரன்" ஆசிரியர் கோபால் மீதான வழக்குகள் பொடாவழக்குகளாக மாற்றப்பட்டால், பொடா சட்டத்தையே நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி நானேதலைமையேற்று போராட்டம் நடத்துவேன்" என்றும் கருணாநிதி கூறினார்.

கம்யூனிஸ்டுகள் குழப்பம்:

இந்நிலையில் திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி புறக்கணிக்கும் என்று தெரிகிறது.

"திமுக இன்னும் பா.ஜ.க. கூட்டணியில்தான் உள்ளது. முதலில் அந்தக் கூட்டணியை உடைத்துக்கொண்டு திமுக வெளியே வரட்டும். அப்படி வராத பட்சத்தில் அக்கட்சியுடன் இணைந்து எப்படிசெயல்பட முடியும்?" என மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் கேட்கிறார்கள்.

ஆனால் இதில் கலந்து கொள்வதில் என்ன தவறு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்கிறது.

"தமிழக அளவில்தான் திமுகவுடன் சேர்ந்து செயல்படப் போகிறோம். எனவே தமிழ்நாட்டுப்பிரச்சனைகளை மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படிப் பார்க்கும்போது தமிழகப்பிரச்சனைகளுக்காகத் தலைமையேற்றுப் போராடும் தகுதி திமுகவுக்கு மட்டுமே உள்ளது" எனஇந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இவர்களுடைய வாதத்தை மார்க்சிஸ்ட் ஏற்க மறுக்கிறது. "மத்திய பா.ஜ.க. கூட்டணியில்திமுக நீடிக்கிறதா, இல்லையா என்பதை கருணாநிதி முதலில் தெளிவு படுத்தட்டும். அதன் பின்னர்மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம்" என்று அந்தக் கட்சி உறுதியாகக் கூறிவிட்டது.

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒதுங்கி நிற்கக் கூடாது என்றும், அதிமுக அரசுக்குஎதிராக அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் குரல் எழுப்ப வேண்டும் என்றும்கருணாநிதி கூறியுள்ளார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X