356ஐ பயன்படுத்தி தமிழக அரசை கலைக்க முடியாது: காங்கிரஸ்
சென்னை:
தமிழகத்தில் அரசியல் சட்டம் 356வது பிரிவைப் பயன்படுத்துவது அவ்வளவு எளிதானது அல்லஎன்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராம் நிவாஸ் மிர்தா கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதிலேயே நாங்கள் தற்போது முழுக் கவனம் செலுத்திவருகிறோம். பிற கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து யோசிப்பதற்குக் கூட எங்களுக்கு நேரம்இல்லை.
திமுகவுடன் கூட்டணி குறித்து நாங்கள் யாரும் முயற்சிக்கவே இல்லை. தேசிய ஜனநாயகக்கூட்டணியிலிருந்து திமுக வெளியேறுமா என்பது குறித்து எனக்குத் தெரியாது.
ஆனால் பா.ஜ.க. இடம் பெற்றுள்ள கூட்டணியில் பங்கேற்றுள்ள எந்த ஒரு கட்சியுடனும் காங்கிரஸ்கூட்டு சேராது. நாங்கள் எப்போதும் தனித்தே ஆட்சி அமைப்போம்.
தமிழகத்தில் 356வது அரசியல் சட்டப் பிரிவைப் பயன்படுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல.மிகவும் அசாதாரண சூழ்நிலையில்தான் அதைப் பயன்படுத்த முடியும்.
அந்தச் சட்டப் பிரிவைக் காட்டி தமிழகத்தில் ஜெயலலிதா அரசை மிரட்டக் கூட மத்திய அரசால்முடியாது.
இருப்பினும் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு நற்சான்றிதழ் கொடுக்க முடியாத நிலை உள்ளது.நள்ளிரவுக் கைதுகள், பத்திரிக்கையாளர்கள் மீது தொடுக்கப்படும் நடவடிக்கைகள் கண்டனத்திற்குஉரியதாகவே உள்ளன என்றார் மிர்தா.


