சார்ஸ்: தாய்லாந்தில் இலங்கை அமைதி பேச்சு நடக்குமா?
கொழும்பு:
சார்ஸ் நோய் பீதி தொடர்ந்து பரவிக் கொண்டிருந்தபோதிலும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைஅரசுக்கும் இடையிலான 7வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே அறிவித்தபடி தாய்லாந்தில்நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே இதுவரை 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துமுடிந்துள்ளன. அடுத்த சுற்றுப் பேச்சுக்கள் வரும் 29ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை 4 நாட்களுக்குநடைபெற உள்ளன.
இதற்கிடையே சீனாவில் தோன்றியதாகக் கருதப்படும் சார்ஸ் நோய் தற்போது உலகமெங்கும்வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 170 உயிர்களைப் பலி கொண்டுள்ள சார்ஸ் நோய் தென் கிழக்குஆசியாவில்தான் வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
சீனா, ஹாங்காங், கனடா, மலேசியா, சிங்கப்பூர் வரிசையில் தாய்லாந்து நாட்டிலும் சார்ஸ் நோய்பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகள்தாய்லாந்திலிருந்து நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவுக்கு மாற்றப்படும் எனத் தகவல்கள்வெளியாகின.
இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல் தாய்லாந்திலேயே 7வது சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
சார்ஸ் நோய் பீதியால் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது என்று இலங்கைஅமைதிப் பேச்சுவார்த்தை செயலகத்தின் தலைவர் பெர்னார்டு குணதிலகே கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications