For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புனேயில் இன்னொரு சார்ஸ் நோயாளி

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

புனேயில் இன்னொருவர் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம்இந்தியாவில் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இந்த புதிய சார்ஸ் நோயாளியின் விவரங்களை வெளியிட மகாராஷ்டிர அரசு மறுத்துவிட்டது. அவர்ஒரு தெற்காசிய நாட்டில் இருந்து வந்தவர் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

கோவாயைச் சேர்ந்த மெரைன் என்ஜினியர் (சிங்கப்பூரில் வசித்தவர்), மும்பை வந்த நியூசிலாந்துக்காரர்(ஹாங்காங்கில் தங்கிவிட்டு வந்தவர்) ஆகிய இருவருக்கு அடுத்தபடியாக இவர் 3வது சார்ஸ் நோயாளியாவார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாங்காக்கில் இருந்து மும்பை வந்தவருக்கு சார்ஸ் நோய்இல்லை என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 45 வயதான அவர் பாங்காக்கில் இருந்துவிமானத்தில் மும்பை வந்தார். முன்னதாக சில நாட்கள் அவர் ஹாங்காங்கிலும் இருந்துள்ளார்.

மும்பை விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு து கடும் காய்ச்சலுடன் மூச்சுத் திணறலும்இருந்ததால் சார்ஸ் நோய் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் உடனடியாக கஸ்தூரிபாய் காந்திமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருந்தது. இந்த மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுஅவருக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. அவரது ரத்தம், சிறுநீர், சளி ஆகியவை சோதனைக்குஉள்ளாக்கப்பட்டன.

இதன் முடிவுகள் இன்று தெரிந்தன. அதில் இவருக்கு சார்ஸ் நோய் தாக்கவில்லை என்றுதெரியவந்தது.

இந்தியாவில் இதுவரை 14 பேர் சார்ஸ் நோய் சந்தேகம் காரணமாக மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்களில் 12 பேருக்கு சார்ஸ் நோய் இல்லை என்றுஉறுதியாகிவிட்டது.

17 ஏர்-இந்தியா விமானங்கள் ரத்து:

சார்ஸ் நோய் பீதி காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் இதுவரை 17 விமானங்களை ரத்துசெய்துள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷானவாஸ் ஹூசேன் கூறியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் சார்ஸ் நோய் இதுவரை 170க்கும் அதிகமான உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. மேலும் சுமார் 4,000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சார்ஸ் நோய் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று ஹூசேன் பேசுகையில்,

சார்ஸ் நோய் அச்சம் காரணமாக சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசியநாடுகளுக்குச் சென்று கொண்டிருந்த 17 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் விமானங்களை ரத்து செய்துள்ளது.

இதனால் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.7.8 கோடியும், இந்தியன் ஏர்லைன்ஸ்நிறுவனத்திற்கு ரூ.92 லட்சமும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் ஈராக் போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்குச் சென்று வந்து கொண்டிருந்த 14 ஏர்இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த இரு பிரச்சனைகள் காரணமாக ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானக் கட்டணங்களின் விலைகளும் உயர்ந்துள்ளன என்றார்ஹூசேன்.

சீன அமைச்சர், மேயர் டிஸ்மிஸ்:

இதற்கிடையே சார்ஸ் நோய் தொடர்பான தகவல்களை உரிய நேரத்தில் அளிக்கத் தவறியதாகவும்நோயைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும் சீன நலத் துறை அமைச்சர் மற்றும் பெய்ஜிங் நகர மேயர்ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவில்தான் இந்த நோய் முதலில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஆனால் நோய் குறித்ததகவல்களை சீனா முதலில் வெளியிடத் தவறி விட்டதாலேயே இந்நோய் வெகு வேகமாக மற்றநாடுகளுக்கும் பரவியது. இதனால் உலக நாடுகள் சீனாவைக் குற்றம் சாட்ட, அதிலிருந்து தப்பஇருவரை பதவி நீக்கம் செய்துள்ளது சீன அரசு.

சுகாதாரத் துறை அமைச்சரான ஸாங் வெங்காங் அமைச்சர் பதவியிலிருந்து மட்டுமல்லாமல் மற்றஅனைத்து முக்கியப் பொறுப்புக்களிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் பெய்ஜிங் மேயரான மேங் சூநோங்கும் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த 3மாதங்களுக்கு முன்புதான இவர் மேயராகப் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள்இருவருமே ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

சீனாவின் உலக சுகாதார குழு

இதற்கிடையே சார்ஸ் நோய் விஷயத்தில் சீனா பொய்யான தகவல்களையே கூறி வந்துள்ளதும்தெரிய வந்துள்ளது.

பெய்ஜிங்கில் மட்டும் 37 பேர் மட்டுமே சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதலில்கூறப்பட்டது. ஆனால் உண்மையில் 346 பேர் அந்நகரில் பாதிக்கப்பட்டுள்ள விவரம் தற்போதுதெரிய வந்துள்ளது.

சீனாவில் மட்டும் இதுவரை 79 பேர் சார்ஸ் நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 1,814பேர் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சார்ஸ் நோய் காரணமாக வரும் மே 1ம் தேதி கொண்டாடப்படவிருந்த மே தினக்கொண்டாட்டங்களையும் சீன அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் சார்ஸ் மேலும் பரவாமல் தடுக்கமுடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே சார்ஸ் நோய் குறித்து ஆராய்வதற்காக சீனாவில் முகாமிட்டுள்ள உலக சுகாதாரநிறுவன அதிகாரிகள் இன்று சாங்காய் நகருக்குச் சென்றுள்ளனர். 6 பேர் கொண்ட உலக சுகாதாரநிறுவன அதிகாரிகள் 4 நாட்கள் சாங்காய் நகரில் தங்கியிருந்து ஆய்வு நடத்துவார்கள்.

இந்நிலையில் ஹாங்காங்கில் சார்ஸ் நோய் காரணமாக மேலும் 6 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்துஅங்கு மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,402 பேர்இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X