சென்னை போக்குவரத்துத்துறையில் 2 பெண் டிரைவர்கள் நியமனம்
சென்னை:
சென்னை மாநகர பஸ்களில் இரு பெண்கள் டிரைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, நாகர்கோவிலில் இரு பெண்கள் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், சென்னையில்அரசு பஸ் டிரைவர்களாக இப்போது தான் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சாவித்திரி மற்றும் சமீதா பானு ஆகிய இந்த இரு பெண் டிரைவர்களும் பணியில் நியமிக்கப்பட்டதைபோக்குவரத்து அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் அறிவித்தபோதே சில மணி நேரத்தில் இருபெண்களும் பஸ்களை இயக்க ஆரம்பித்துவிட்டனர்.
இவர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் டிரைவர் வேலையில் பணிபுரிய ஆர்வம் தெரிவித்து சென்னைமாநகர போக்குவரத்துத்துறைக்கு பயோ-டேட்டாவை அனுப்பினர். இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்குத்தெரிவிக்கப்பட்டது.
உடனே இருவருக்கும் பயிற்சி தரவும் வேலை வாய்ப்பு தரவும் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த 3மாதங்களாக இருவருக்கும் டிரைவர் பயிற்சி தரப்பட்டது.
இருவரும் தாம்பரம்- பாரிமுனை இடையிலான சென்னையின் மிக நீண்டதூர பஸ்களான் 18-ஏ ரூட் பஸ்களைஇயக்க ஆரம்பித்துள்ளனர்.
இவர்களுக்குத் துணையாக அந்த பஸ்களில் பெண் கண்டக்டர்களேநியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பெண் டிரைவர்களுக்கு பெண் பயணிகள் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர். ஆண்களும் தங்கள்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த இருவருமே மிக ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications