கப்பல் மூழ்கியதா?: தமிழகத்தில் கரை ஒதுங்கும் பிரம்மாண்ட மரங்கள்!
கடலூர்:
தமிழக கடல் பகுதியில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளாகி இருப்பதாகக் தெரிகிறது. அதில் கொண்டுசெல்லப்பட்ட மிகப் பெரிய மரங்கள் இப்போது தமிழகத்தின் கிழக்குக் கடல் பகுதிகளில் கரையொதுங்கிவருன்றன.
இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் வெப்ப மண்டலக் காடுகளில் இருந்து தேக்கு உள்ளிட்டவிலை உயர்ந்த மரங்கள் வெட்டப்பட்டு பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகி வருகின்றன.
கிட்டத்தட்ட 80 அடி நீளம், 10 அடி சுற்றளவு கொண்ட பிரம்மாண்டமான மரங்கள் இவை.
இந் நிலையில் கடலூர், பாண்டிச்சேரி, சொத்துக்குப்பம், பன்னித்திட்டு, பெரியகுப்பம், திருமுல்லைவாசல்,மரக்காணம் போன்ற தமிழகத்தின் கிழக்குப் பகுதி கடற்கரையில் இந்த மரங்கள் ஒதுங்க ஆரம்பித்துள்ளன.
இவை ஒவ்வொன்றும் ரூ. 6 லட்சம் மதிப்புடையவை என்று தெரிகிறது. பல மரங்கள் நடுக்கடலில் மிதந்துகொண்டிருப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர். கடலில் சென்ற ஏதாவது சரக்குப் கப்பல் மூழ்கியிருக்கலாம் அல்லதுபுயல் எதிலாவது சிக்கி அதில் இருந்த மரங்கள் கடலில் விழுந்திருக்கலாம் என கடற்படை கருதுகிறது.
இந்த மரங்களை யாரும் தனிப்பட்ட முறையில் கொண்டு செல்லக் கூடாது என சுங்கத்துறையினர் எச்சரித்துள்ளனர்.ஒதுங்கும் மரங்களை ஆங்காங்கே அப்படியே விட்டுவிட்டு அல்லது கிராம பஞ்சாயத்துகளிடம் ஒப்படைத்துவிட்டுஉடனே சுங்கத்துறைக்கு தகவல் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மரங்கள் மிகவும் ஊறிப் போய் உள்ளதால், இந்தக் கப்பல் விபத்துக்குள்ளாகி பல மாதங்கள் கூட ஆகியிருக்கலாம்என்றும் கடற்படையினர் கூறுகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications