போராட்டத்தை கைவிட மருத்துவ மாணவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் வரும்மே 1ம் தேதிக்குள் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு வகுப்புகளுக்கும் பணிக்கும் திரும்பவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் உயர் நீதிமன்றத்தின் அறிவுரையையும் மீறி மருத்துவ மாணவ, மாணவிகள் இன்றும் தங்கள்போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அரசு தங்களை அழைக்கும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். மே 1ம் தேதியாவது அவர்கள் போராட்டத்தைக்கைவிடுவார்களா என்று தெரியவில்லை.

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைளைவலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் 5ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.மாணவர்களான பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு பல் மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்கள் சங்கத்தலைவரான டாக்டர் அமுதா கலைஞன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.அம்மனுவில்,

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திதான் காலவரையற்றவேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வெளியேற்றஅக்கல்லூரி முதல்வர்களுக்கும் தமிழக அரசுக்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.

மாணவர்களின் கருத்தைக் கேட்காமல் படிப்புக் கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்கக் கூடாதுஎன்று அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிபா ஸ்ரீதேவன் தன் உத்தரவில், மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆலோசனையைக் கேட்காமல், தனியார்மயமாக்கல் முடிவை அரசு எடுக்கக்கூடாது. மேலும் மாணவர்களின் கருத்தைக் கேட்காமல் படிப்புக் கட்டணத்தையும் அரசு உயர்த்தக்கூடாது.

இந்த விஷயம் தொடர்பாக இன்னும் ஒரு வாரத்திற்குள் அரசுத் தரப்பினரும், மருத்துவக் கல்விஇயக்குநர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரும் பேச்சு நடத்த வேண்டும். அவர்களுக்கு தமிழகஅரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் உதவ வேண்டும்.

மேலும் மருத்துவ மாணவ, மாணவிகள் மே 1ம் தேதிக்குள் வகுப்புகளுக்குத் திரும்ப வேண்டும்.அதேபோல பயிற்சி டாக்டர்களும் பணிக்குத் திரும்பவேண்டும் என்று நீதிபதி பிரதிபா ஸ்ரீதேவன்உத்தரவிட்டுள்ளார்.

தொடரும் போராட்டம்:

சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகள், அரசுநிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தங்களை அழைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்றுஅறிவித்துள்ளனர்.

இதேபோல் திருச்சியிலும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகளுக்குபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹவுஸ் சர்ஜன்கள் மருத்தவமனை வளாகத்தில் வைத்தே சிகிச்சைஅளித்தனர்.

கோயம்புத்தூரில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்றுசிறப்பு ரத்த தான முகாம் நடத்தினர். சுமார் 50 மாணவ, மாணவிகளும் ரத்த தானம் செய்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+