மருத்துவ மாணவர்களுடன் மே 3ம் தேதி பேச்சு: அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் வரும் மே 3ம் தேதி தமிழகஅரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23ம் தேதியிலிருந்து மருத்தவ, பல் மருத்தவக்கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் இன்று 8வது நாளை எட்டியுள்ள நிலையில் மாணவர்களுடன் பேச்சு நடத்த அரசு முன்வந்துள்ளது. சட்டசபையில் இது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்குசெம்மலை பதிலளிக்கையில்,

முதல்வர் அவர்களின் உத்தரவுப்படியும், ஆலோசனைப்படியும் மே 3ம் தேதி

மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போதுஅவர்களது பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.

ஆயினும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்குஇல்லை. இந்திய மருத்துவக் கவுன்சில்தான் அதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்.

கடந்த 2ஆண்டுகளில் எந்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் தமிழக அரசு அனுமதிஅளிக்கவில்லை என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே சென்னை உயர் நீதிமன்ற அறிவுரையின்படி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உடனடியாகவகுப்புகளுக்குத் திரும்ப வேண்டும் என்றார் செம்மலை.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+