"கருணாநிதியின் உடல் நலக் குறைவுக்கு காரணம் கறுப்புத் துண்டு": ராம கோபாலன்
சென்னை:
மஞ்சள் துண்டைக் கைவிட்டு விட்டு ஒரே ஒரு நாள் கறுப்புத் துண்டு அணிந்திருந்தகாரணத்தால்தான் திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக இந்து முன்னணிஅமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மஞ்சள் துண்டு அணிந்த பிறகுதான்கருணாநிதி நன்றாக இருந்தார். ஆனால் இடையில் ஒரே ஒரு நாள் மட்டும் கறுப்புத் துண்டுஅணிந்தார்.
இதைத் தொடர்ந்தே உடல் நலக் குறைவு ஏற்பட்டு விட்டது. இதை நான் கூறவில்லை. மக்கள்கூறுகிறார்கள். எனவே எந்தக் காரணம் கொண்டும் மஞ்சள் துண்டு அணிவதை கருணாநிதி கைவிட்டுவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல, கோயம்புத்தூரில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி பேசுகையில்,ஆட்சிக் கட்டிலில் தான் இல்லாவிட்டாலும், மக்களின் இதய சிம்மாசனத்தில் இருப்பதாக கூறினார்.தன்னைத் தானே தேற்றிக் காள்ள இப்படிக் கூறியுள்ளார்.
அவர் அங்கேயே இருக்கட்டும். அதை விட்டுவிட்டு அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் ஆட்சிக்கட்டிலுக்கு அவரைத் தள்ளிவிட வேண்டாம் என்று திமுகவினரையும் மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
ஜெயலலிதாவை வீழ்த்த அத்தனை எதிர்க் கட்சிகளும் கங்கணம் கட்டிக் கொண்டு அணி சேரமுயற்சித்துக் கொண்டுள்ளன. இது வேடிக்கையாக உள்ளது. இந்தக் கட்சியினரால், ஒரு நாள் கூடஆட்சிக் கட்டிலில் இல்லாமல் இருக்க முடியாது.
கோவில்களில் நடந்து வந்த படப்பிடிப்புகளால் கோவில்களின் புனிதமே கெட்டுப் போய் விட்டது.ஆபாசமான பாட்டுக்கள், நடனங்கள் என கோவிலையே கெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போது கோவில்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதித்துள்ளது ஆன்மீக பக்தர்களுக்கு பெரும்நிம்மதியைக் கொடுத்துள்ளது. அதற்காக தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவிக்கும் இந்துமுன்னணி நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் ராம கோபாலன்.
கருணாநிதியிடம் சோ.பா. நலம் விசாரிப்பு:
இதற்கிடையே கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து, காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன்மற்றும் செயல் தலைவர் இளங்கோவன் ஆகியோர் அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
கோயம்புத்தூர் சென்றிருந்தபோது, கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல் நலக் குறைவுஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அங்கு சிகிச்சை தரப்பட்டது. பின்னர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு சென்னை திரும்பினார்.
இந்நிலையில் நேற்று மாலை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்கு சோ.பாவும்இளங்கோவனும் வந்து, கருணாநிதியை சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
விரைவில் அவர் முழுமையாகக் குணமடைய வேண்டும் என்று தங்கள் வாழ்த்துக்களையும் அவர்கள்கருணாநிதியிடம் தெரிவித்தனர். அவர்களுக்கு கருணாநிதி நன்றி கூறினார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications