மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அறிவிப்பு
சென்னை:
திட்டமிட்டபடி ஜூலை 2ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.
பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கக் கோரி ஏற்கனவே பலமுறை இவர்கள் போராட்டம் நடத்திவிட்டனர்.காலவரையற்ற வேலை நிறுத்ததிலும் ஈடுபட்டனர். ஆனால் சங்கங்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால்ஸ்டிரைக் பிசுபிசுத்தது.
இம் முறை அனைத்து சங்கங்களும் ஒன்று சேர்ந்துள்ளன. எனவே இந்த முறை வேலை நிறுத்தம் முழுமையாகஇருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய கூட்டமைப்புகளான ஜாக்டியோ ஜியோ மற்றும் கோடா ஜியோஆகிய இரு அமைப்புகளும் இணைந்து வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளன.
இரு அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், மே 8ம் தேதி மாவட்ட தலைநகரங்களில்சாலை மறியல் நடத்தப்படும். தொடர்ந்து திட்டமிட்டபடி ஜூலை 2ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கப்பட்டவுடன் மீண்டும் மூடப்படும் நிலைஉருவாகியுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசியர்கள் ஆகியோர் பெரும்பாலும் திமுக அனுதாபிகள் என அதிமுக நினைக்கிறது. இதனால்இவர்களது சலுகைகளைப் பறித்ததோடு மேலும் பல நெருக்குதல்களையும் கொடுத்து வருகிறார் முதல்வர்ஜெயலலிதா.


