காவிரி: கர்நாடக அரசின் ஏமாற்று வேலை- ஜெயாவுக்கு ராமதாஸ் எச்சரிக்கை
மதுரை:
காவிரிப் பிரச்சினையை நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா கூறியிருப்பது ஏமாற்று வேலை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், ஜூன் மாதம் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவேண்டும். இதை தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதி செய்ய வேண்டும்.
இதன் பொருட்டு பிரதமர் வாஜ்பாய், மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஆகியோருடன்ஆலோசித்து, காவிரி கண்காணிப்புக் குழுவைக் கூட்டி மாதாந்திர அடிப்படையில் காவிரியில் நீர்திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேட்டூர் அணைக்கு தண்ணீர் விட வேண்டிய நிலையில் தற்போது கர்நாடகம் உள்ளது. இதனால்அதைத் தவிர்க்கவும், தமிழகத்தின் கோரிக்கையை திசை திருப்பவுமே நீதிமன்றத்திற்கு வெளியேபேசித் தீர்வு காணலாம் என்று கூறுகிறார் கிருஷ்ணா.
இது ஒரு ஏமாற்று வேலை. இதை தமிழக முதல்வர் நம்பி விடக் கூடாது. கர்நாடக முதல்வரின்அழைப்பை ஏற்கக் கூடாது என்றார் ராமதாஸ்.


