வரதட்சணை கேட்டு கல்லூரி ஆசிரியை சித்திரவதை: கணவர், 2 பேர் கைது
ஈரோடு:
பொறியியல் கல்லூரி பேராசிரியை ஒருவர் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகஅவருடைய கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோட்டைச் சேர்ந்த சிவபாரதி என்பவர் சேலத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில்பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் சரவணன்.
இவர்களுடைய திருமணத்தின்போது சிவபாரதி ஏராளமான சீர்களுடன் சரவணன் வீட்டிற்கு வந்தார்.மேலும் சரவணன் வீட்டாருக்கு வரதட்சணையாக ரூ.10 லட்சம் வரை சிவபாரதியின் பெற்றோர்கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேலும் ரூ.5 லட்சம் வரதட்சணை வேண்டும் என்று கேட்டுசிவபாரதியை சரவணனும் அவருடைய வீட்டில் இருந்தவர்களும் சித்திரவதை செய்துள்ளனர்.
இதையடுத்து சிவபாரதி அளித்த புகாரின் அடிப்படையில் சரவணன், அவருடைய தந்தைசுப்பிரமணி மற்றும் சித்தி சரஸ்வதி ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


