அக்னி நட்சத்திர "அட்டாக்" தொடங்கியது
சென்னை:
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திர வெயிலின் கொடுமை அதி உக்கிரமாய்ஆரம்பித்துள்ளது.
அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளான நேற்று அதிகபட்சமாக திருச்சியில் 101 டிகிரி வெப்பநிலைபதிவானது. சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று வெயில்கடுமையாகவே இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையிலும் வெயில் நன்றாகக் கொளுத்தியது. இங்கு சுமார் 100 டிகிரி வெப்பநிலைபதிவாகியது.
நேற்று ஞாயிற்றுக்கிழமையும் என்பதால் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலை மோதியது.வீட்டிற்குள்ளும், வெளியிலும் இருக்க முடியாத மக்கள் கடற்கரையில் கடல் நீரில் கால்களையும்உடலையும் நனைத்து சூட்டைத் தணித்துக் கொண்டனர்.
கடும் வெயில் காரணமாக குளிர் பானங்கள், பழச்சாறுகள் விற்பனையும் சூடுபிடித்து வருகிறது.
அக்னி நட்சத்திரத்தின் கொடுமை ஜூன் 1ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் சூட்டிலிருந்து தப்பிக்கமக்கள் பல்வேறு திட்டங்களையும் தீட்டி வருகிறார்கள். பலர் ஊட்டி, கொடைக்கானல் என்று கோடைவாசஸ்தலங்களுக்குக் கிளம்பிச் செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications