பசுக்களில் எந்திரங்கள் மூலம் பால் கறக்க ஜெயலலிதா எதிர்ப்பு
சென்னை:
மாடுகளின் "மடியில்" இயந்திரத்தைப் பொருத்தி பால் கறப்பது மிகவும் கொடூரமானது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபையில், இதுதொடர்பாக எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு ஜெயலலிதா பதிலளிக்கையில், கைகளால் பால் கறப்பதற்குப் பதில்,வெளிநாடுகளில் உள்ளது போல, பசு மாடுகளின் மடிகளில் இயந்திரத்தைப் பொருத்தி பால் கறக்கலாம் என்ற திட்டத்தை அதிகாரிகள்என்னிடம் கூறினர்.
இதைக் கேட்டவுடன், திட்டத்தை நான் நிராகரித்து விட்டேன். காரணம், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் இயந்திரம் பொருத்தப்பட்டுஇருந்தால், மடிகளில் ரத்தம் வெளியாகத் தொடங்கி விடும். இது மிகவும் கொடூரமானது என்றார் அவர்.
விலங்குகளின்பால் ஜெயலலிதாவுக்கு சமீபத்தில் அதிக அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளார்.
சமீபத்தில் பிச்சை எடுக்க வைக்கப்பட்ட யானை ஒன்றை மீட்க அவர் உத்தரவிட்டார். அதேபோல, இறைச்சிக்காக வெட்டப்பட லாரிகள்,வேன்களில் கொண்டு செல்லப்படும் மாடுகளை மீட்டு அருகில் உள்ள மாடுகள் பாதுகாப்பு கொட்டடிகளில் சேர்க்குமாறு அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பால் கறக்கும் எந்திரங்களுக்குத் தடை விதித்து பசு மாடுகளை காப்பாற்றியுள்ளார் ஜெயலலிதா.
சங் பரிவார்களின் நெருக்குதலால் பசு வதைத் தடுப்புச் சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வர உள்ள நிலையில் அதிமுகவும் அதற்குஆதரவு தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications